மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

இரு தொகுதிகளில் தினகரன் -தென் மாவட்டத்தில் களமிறங்குகிறார்?

இரு தொகுதிகளில் தினகரன்  -தென் மாவட்டத்தில் களமிறங்குகிறார்?

வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 9) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “உண்மையான தர்மயுத்தம் என்பது நாம் தேர்தலில் போட்டியிடுவதுதான். அது தொடங்கிவிட்டது. மக்களிடம் செல்ல இருக்கிறோம். வரும் 12 ஆம் தேதி சென்னையில் பொதுக்கூட்டம் இருக்கிறது. வேட்பாளர் அறிமுகக் கூட்டமாக இருக்கும். அதைத் தொடர்ந்து எனது தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். வர இருக்கும் தேர்தலில் நான் இரு தொகுதிகளில் நிற்பதாக இந்த நேரம் வரை முடிவு செய்துள்ளேன். ஆர்.கே.நகரிலும் போட்டியிடலாம்” என்ற தினகரனிடம்,

“இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், 1500 ரூபாய் என்று திமுக, அதிமுகவினரின் வாக்குறுதிகளைப் பற்றி கேள்வி எழுப்பியபோது,

“கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க முடியாமல், வருடத்துக்கு ஆறு கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக தருகிறேன் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். ஏற்கனவே முதியோர் ஓய்வூதியத் தொகையையே ஒழுங்காக இந்த அரசால் கொடுக்க முடியவில்லை. இதில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் என்று அவர் அறிவிக்கிறார். அதையடுத்து அனைத்து பெண்களுக்கும் 1500 என்று இவர்கள் அறிவிக்கிறார்கள். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. மக்களே இதை உணர்ந்துகொள்வார்கள்” என்று கூறினார் டிடிவி தினகரன்.

நேற்று நேர்காணலிலேயே, “நான் இரு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறேன்” என்று கட்சியினரிடம் சொல்லிக் கொண்டிருந்த தினகரன், இன்று அதை செய்தியாளர்களிடமும் பதிவு செய்திருக்கிறார். தென் மாவட்டத்தில் தினகரனை போட்டியிடச் சொல்லி நிறைய விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதால் அங்கேயே போட்டியிடக் கூடும். ஏற்கனவே பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் தினகரன். எனவே அந்தத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடலாம். இப்போது பெரியகுளம் தொகுதி மறு சீரமைப்புக்குள்ளாகி தேனி மக்களவைத் தொகுதியாக இருக்கிறது. ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியாக இருக்கிறார். இந்தத் தொகுதிக்குள் ஆண்டிப்பட்டி, கம்பம், பெரியகுளம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. போடி தொகுதியில் ஓபிஎஸ் நிற்கிறார்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

செவ்வாய் 9 மா 2021