மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

ஜாமம் 2 மணிவரை பேச்சுவார்த்தை... புதுவை பாஜக அணி தொகுதி உடன்பாடு!

ஜாமம் 2 மணிவரை பேச்சுவார்த்தை... புதுவை பாஜக அணி தொகுதி உடன்பாடு!

அடுத்தடுத்த திருப்பங்களை அளித்துவரும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில், மத்திய ஆளும் பாஜக கட்சிக்கும் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஒருவழியாக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியுடன் நேற்று (மார்ச் 8) மாலை பாஜக நிர்வாகிகள் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முதல் கட்ட உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, கூட்டணியின் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்படவேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அதிமுக, பாமக நிர்வாகிகளுடன் பாஜக தலைவர்கள் நடத்திய உரையாடல் நள்ளிரவுதாண்டியும் நீடித்தது. இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. நிறைவாக தொகுதிப்பங்கீடு இறுதிசெய்யப்பட்டது.

அதன்படி, புதுவை சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும் அதிமுகவுக்கு 4 தொகுதிகளும் பாஜகவுக்கு 9 தொகுதிகளும் பாமகவுக்கு ஒரு தொகுதியும் பிரித்துக்கொள்வதென முடிவுசெய்யப்பட்டது.

மூன்று கட்சிகளும் தலா ஒரு நியமன உறுப்பினர் பதவியை எடுத்துக்கொள்வது என்றும் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். தொகுதிப்பங்கீடு குறித்த அறிவிப்பு எந்த நேரமும் வெளியிடப்படலாம் என்று கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- பாலசிங்கம்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 9 மா 2021