மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

தமிழக பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய மோடி!

தமிழக பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய மோடி!

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள், காதி பொருட்களை வாங்கினார். இதில் தமிழக பழங்குடியின பெண்கள் தயாரிக்கும் சால்வையை வாங்கியிருக்கிறார் பிரதமர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் தொழில்முனைவோருக்கும், தற்சார்பு இந்தியாவுக்கும் ஊக்கமளிக்கும் முயற்சியாக பிரதமர் பெண்கள் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கியிருக்கிறார்.

தற்சார்பு இந்தியாவுக்கான லட்சியப் பயணத்தில் பெண்களின் பங்கு குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, “ மகளிர் தொழில் முனைதலில், படைப்புத்திறன் மற்றும் இந்தியாவின் கலாச்சாரத்தைக் கொண்டாடும் சில பொருட்களை நான் வாங்கியுள்ளேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தின் தோடா பழங்குடியினரால் பூத்தையலால் நெய்யப்பட்ட சால்வையை வாங்கியது குறித்துப் பதிவிட்ட பிரதமர், “தமிழ்நாட்டில் உள்ள தோடா பழங்குடியின கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட பூத்தையலால் நெய்யப்பட்ட நேர்த்தியான சால்வை மிகவும் அழகாக உள்ளது. நான் ஒரு சால்வையை வாங்கியுள்ளேன். டிரைப்ஸ் இந்தியாவால் இது சந்தைப்படுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

நாகாலாந்தின் பாரம்பரிய சால்வையை வாங்கிய பிரதமர், “வீரம், கருணை மற்றும் படைப்புத்திறனைப் பிரதிபலிக்கும் நாகா கலாச்சாரத்தின் மீது இந்தியா பெருமை கொள்கிறது. நாகாலாந்திலிருந்து பாரம்பரிய சால்வையை வாங்கியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மதுபனி ஓவியத்துடன் கூடிய காதி பருத்தி அங்கியை வாங்கியது குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர், “மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் வளமிக்க வரலாற்றுடன், காதிப் பொருட்கள் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. மதுபனி ஓவியத்துடன் கூடிய காதி பருத்தி அங்கியை வாங்கினேன். உயர்தர பொருளான இது, நமது மக்களின் படைப்புத்திறனோடு பின்னிப்பிணைந்துள்ளது ”, என்று பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்ட சணல் கோப்புறை, அசாம் பெண்களால் தயாரிக்கப்பட்ட கமுசா, கேரள பெண்களால் தயாரிக்கப்பட்ட பனை கைவினை நிலவிளக்கு ஆகியவற்றை வாங்கியிருக்கிறார் பிரதமர் மோடி .

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 9 மா 2021