மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 மா 2021

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, 6 சிலிண்டர் இலவசம்: எடப்பாடி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500, 6 சிலிண்டர்  இலவசம்: எடப்பாடி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1500ம், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. கடந்த மார்ச் 7ஆம் தேதி திருச்சி திமுக மாபெரும் பொதுக்கூட்டத்தில், ”இல்லத்தரசிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்” என்று அறிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் தங்களது திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார் என மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். அதுபோன்று, பாஜகவின் கலை கலாச்சாரப் பிரிவு தலைவரான காயத்ரி ரகுராம், இது பாஜகவின் திட்டம் என்று தெரிவித்தார்.

இதுவொருபுறம் இருக்க, வர இருக்கும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய 1000 ரூபாயை 1,500 ரூபாயாக உயர்த்தி இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்க ஒரு ஆலோசனை நடந்து வருகிறது என அதிமுக வட்டார தகவல்கள் தெரிவித்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம்: இது யாருடைய திட்டம்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இதனிடையே அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுடன் நேற்று அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ 1500 ரொக்கம் மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று மகளிர் தினத்தை முன்னிட்டு அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிகள் பங்கிடுவது, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைத்தும் சுமுகமான வகையில் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக தயாரித்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற மகளிருக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை எப்படியோ தெரிந்து கொண்ட திமுக, முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட்டுவிட்டதாகவும், தமிழக மக்கள் விரும்பும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

-பிரியா

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 9 மா 2021