மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

தினகரன் -ஒவைசி திடீர் கூட்டணி! யாருக்கு பாதிப்பு?

தினகரன் -ஒவைசி  திடீர் கூட்டணி!  யாருக்கு பாதிப்பு?

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணியில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் அசாதுதீன் ஒவைசி கட்சி கூட்டணி வைத்துள்ளது.

அமமுக கூட்டணியில் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ் ஏ இத்திஹாதுல் முஸ்லிமின் கட்சி மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று (மார்ச் 8) ஓவைசி கட்சியின் தமிழக தலைவர் வக்கீல் அஹமது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில்.

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது”என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினகரனின் இந்த அறிவிப்பு ஏற்கனவே அமமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ கட்சி வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து எஸ்டிபிஐ போட்டியிட்டது. இந்நிலையில் ஓவைசியுடன் அமமுக அணி சேர்ந்திருக்கும் நிலையில் எஸ்டிபிஐ வட்டாரங்களில் விசாரித்தபோது, “இப்போது வரை முடிவாகவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று இன்று மாலை தெரிவித்தனர்.

ஏற்கனவே ஓவைசி கட்சி திமுக உடன் கூட்டணி வைக்கப் போவதாக ஒரு பேச்சு எழுந்தது. திமுகவின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் மஸ்தான் ஹைதராபாத் சென்று ஓவைசியை நேரில் சந்தித்து, திமுகவின் சிறுபான்மை பிரிவு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதற்கு திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக தலைமை இம்முடிவை கைவிட்டது. ‘தோழமைக் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு’ என்று விளக்கம் கொடுத்தது திமுக.

அதன் பின் ஓவைசி கட்சி கமல்ஹாசனுடன் சேர்வதாக பேசப்பட்டது. ஆனால் இன்று தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் அக்கட்சி கூட்டணி வைத்து மூன்று தொகுதிகளை பெற்றுள்ளது. இது அதிமுகவையும், திமுகவையும் யோசிக்க வைத்துள்ளது.

“தேசிய அளவில் இஸ்லாமிய தலைவராக உருவாகி வரும் ஓவைசி அமமுகவோடு கூட்டணி வைத்துள்ளது இன்றைய இளைய தலைமுறை இஸ்லாமியர்களிடையே ஒரு கவனிப்பை ஏற்படுத்தும். ஓவைசி தமிழ்நாட்டில் வந்துபிரச்சாரம் செய்தால் இஸ்லாமிய வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே செல்லும் என்ற நிலை மாறவும் வாய்ப்புள்ளது. எனவே ஓவைசி தினகரன் கூட்டணி திமுகவுக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லிம்கள் ஓட்டு தங்களுக்கு வர வாய்ப்பே இல்லை என்று முடிவு செய்துவிட்ட அதிமுக இந்த தினகரன் ஓவைசி கூட்டணியை உள்ளுக்குள் வரவேற்கிறார்கள்” என்கிறார்கள் இஸ்லாமிய அரசியல் பார்வையாளர்கள்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

திங்கள் 8 மா 2021