மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

விஜயகாந்த் கூட்டிய திடீர் மாசெக்கள் கூட்டம்: காரணம் என்ன?

விஜயகாந்த் கூட்டிய திடீர் மாசெக்கள் கூட்டம்: காரணம் என்ன?

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மட்டும் தொகுதிப் பங்கீடு முடியாமல் இருந்த நிலையில் நேற்று (மார்ச் 7) தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும் சந்தித்தார். இதையடுத்து இன்று கையெழுத்தாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... “நாளை (மார்ச் 9) தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொள்ளும் அவசரக் கூட்டம் நடைபெறும்”என்று அழைப்பு விடுத்துள்ளார் விஜயகாந்த்.

இந்த நிலையில் தேமுதிகவின் மாசெக்கள் கூட்டத்துக்கு என்ன அவசரம்? தேமுதிக வட்டாரத்திலேயே விசாரித்தோம்.

“பாஜக, பாமகவுக்கு தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையில் தேமுதிக மட்டும் பாமகவுக்கு இணையாகத் தொகுதிகள் கேட்டு மல்லுக்கட்டி வந்தது. அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, எம்.பி. கே.பி. முனுசாமி மூவரும் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று சுதீஷ் மற்றும் பார்த்தசாரதியிடமும் பேசிவிட்டுவந்தார்கள்.

அதைத் தொடர்ந்து அதிமுகவிடம் தேமுதிகவினர் நான்கு முறை பேச்சு வார்த்தை நடத்தியும் கூட்டணியில் முன்னேற்றம் இல்லை என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகத் தலையிட்டு சுதீஷ் உள்ளிட்ட தேமுதிக குழுவினரை நேற்று இரவு வீட்டுக்கு வரவழைத்து அரசியல் மற்றும் கூட்டணி சூழ்நிலைகளை விளக்கினார். ‘மேடத்திடம் சொல்லுங்கள். ஃப்யூச்சர்ல நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு நான் நல்லது செய்கிறேன் ’என்று சமரசம் செய்து அனுப்பிவைத்துள்ளார்.

சுதீஷும் பிரேமலதாவிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். அந்த செய்தியைதான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முறைப்படி சொல்லி, அதன் பின் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடப் போகிறார்கள். சீட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி அவர்களிடம் முறைப்படி சொல்லிவிட்டு செய்யலாம் என்பதால்தான் இந்தக் கூட்டம்” என்கிறார்கள்.

சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அதே நேரத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை ஏற்பாடுகள் செய்துள்ளார் மாவட்டச் செயலாளர் சிவகொழுந்து. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள செல்கிறார் விஜய பிரபாகரன். அதனால் அந்த மாசெ மட்டும் நாளை கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்.

‘அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியாகவிட்டது” என்கிறார்கள் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 8 மா 2021