மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 மா 2021

முதல்வர் - சுதீஷ் சந்திப்பு: தேமுதிக கூட்டணி சுபம்!

முதல்வர் - சுதீஷ் சந்திப்பு: தேமுதிக கூட்டணி சுபம்!

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்ட நிலையில், தேமுதிகவுடன் மட்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருந்தது.

பாமகவுக்கு நிகரான தொகுதிகளைத் தனக்கு தேமுதிக கேட்டு வந்த நிலையில் அதிமுக தொடர்ந்து மறுத்து வந்தது. கடைசியாக அதிமுக அமைச்சர்களுக்கும் தேமுதிக பிரதிநிதிகளுக்கும் இடையே மார்ச் 6ஆம் தேதி இரவு பேச்சு வார்த்தை நடந்தது. பேச்சு நடத்திய பார்த்தசாரதி பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஒன்றும் இல்லை. 40 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் இன்று 23 தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் என சற்று இறங்கி வந்துள்ளோம். இதில் மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க உறுதியளித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை குறித்து தலைமையிடம் சொல்லி நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும்” என்று கூறினார்.

இந்த நிலையில் நேற்று (மார்ச் 7) இரவு தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பின்போது தேமுதிகவுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் இன்று உடன்பாடு கையெழுத்தாகிவிடும் என்றும் இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 12 தொகுதிகளில் பிடிவாதமாக இருந்த அதிமுக, இன்னும் சில தொகுதிகள் தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்கலாம் என்று தெரிகிறது. ராஜ்ய சபாவும் தேமுதிகவின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து இன்று முடிவு எட்டப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படலாம் என்கிறார்கள்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 8 மா 2021