மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தபால் ஓட்டுக்களில் கவனம்: திமுக தலைமை கட்டளை!

தபால் ஓட்டுக்களில் கவனம்: திமுக தலைமை கட்டளை!

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7சட்டசபை தொகுதியில் 2016இல் நான்கு இடங்களில் வென்ற திமுக இந்த தேர்தலில் ஏழு தொகுதியிலும் வெற்றி பெற தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் 2016சட்டமன்ற தேர்தலில் விருதுநகர், திருச்சுழி,அருப்புக்கோட்டை ராஜபாளையம் தொகுதிகளில் திமுக வென்றது. சிவகாசி, சாத்தூர், ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் அதிமுக வென்றது. இந்த தேர்தலில் ஏழு தொகுதியையும் கைப்பற்ற திமுக தலைமை, மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுக்கு கட்டளையிட அவர்கள் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர்.

ஓட்டுகள் எந்த பகுதியில் குறைகிறதோ அப்பகுதியினரின் கட்சி பதவி, முடிவு வந்த மூன்று நாளிலே காலியாகி விடும் என சனிக்கிழமை (மார்ச் 6) விருதுநகரில் நடந்த தி.மு.க. வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர செயற்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏ. சாத்துார் ராமச்சந்திரன் கூறினார்.

அவர் மேலும் பேசும்போது, “ 80 வயதுக்கு மேற்பட்டோர் பட்டியலை தந்துவிடுவோம். தபால் ஓட்டு போட விரும்பவில்லை. ஓட்டுச்சாவடியில் தான் ஓட்டு போடுகிறோம்' என அவர்களை கூற வைக்க வேண்டும். ஒரு தொகுதியில் இவர்களது ஓட்டுக்கள் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் எண்ணிக்கை வரை உள்ளது. பீகாரில் தபால் ஓட்டால்தான் பா.ஜ.க வென்றது. நாம் சுதாரித்து கொள்ள வேண்டும். ஒருவரின் வெற்றி தோல்வியை இந்த தபால் ஓட்டுக்கள் நிர்ணயிக்க போகிறது.மின்வாரிய ஊழியர்கள், கொரோனா வந்தவர்கள், கொரோனா வந்து சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்கள் என பா.ஜ.க தபால் ஓட்டு போடுவோரின் பட்டியலை நீட்டித்து கொண்டே போகிறது. தபால் ஓட்டை விலை கொடுத்து வாங்கி ஜெயிக்க நினைக்கின்றனர். 2016ல் ராதாபுரத்தில் அப்பாவு 40 ஒட்டில் தோற்றார். தபால் ஓட்டுக்களில் 140 ஓட்டுக்களை செல்லாத ஓட்டுக்கள் ஆக்கினர். 5 ஆண்டுகளாகியும் வழக்கு முடியவில்லை.

வெற்றி நம் கையைவிட்டு போனால் எங்கு போனாலும் நியாயம் கிடைக்காது.தேர்தல் பணிகளில் சரியாக வேலை செய்யவில்லை என்றால் ஆட்களை மாற்றிவிடுங்கள். தயவு, தாட்சண்யம் பார்த்தால் உங்கள் பதவியும் போய்விடும், எங்கள் பதவியும் போய்விடும். கட்சி முன்பு மாதிரி இல்லை. எந்த பகுதியில் ஓட்டு குறைவாக பெறுகின்றனரோ அவர்களது பதவியும், தேர்தல் முடிவு வந்த மூன்று நாட்களில் காலியாகிவிடும்.தலைமைக்கு ஜெயிப்பது மட்டும் தான் குறிக்கோள். மாவட்டத்தில் ஏழுக்கு ஏழும் ஜெயிக்க வேண்டும்” என்றார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., பேசும்போது, “தபால் ஓட்டுகள்தான் தொகுதியின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன. முன்பு தபால் ஓட்டில் அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், ஆசிரியர்கள் தான் இருந்தனர். தற்போது 80 வயதுக்கு மேல் ஆனவர்கள் , மாற்றுத்திறனாளிகள், தேர்தல் நேரத்தில் பணியில் இருப்பவர்கள் என மூன்று வகையாக பிரித்துள்ளனர். இவர்களது எண்ணிக்கையில் தான் வெற்றி தோல்வியே நிர்ணயிக்கப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 28 ஆயிரம் ஓட்டுக்கள் வரை உள்ளன. 80 வயதுக்கு மேல் உள்ளோர், மாற்றுத்திறனாளிகளிடம் எச்சரிக்கை செய்ய வேண்டும். கண் அயர்ந்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும், என்றார். கூட்டத்தில் எம்.பி. தனுஷ்குமார், எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், உட்பட பலர் பங்கேற்றனர்.

-சக்தி பரமசிவன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 7 மா 2021