மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்!

மீண்டும் இ-பாஸ் கட்டாயம்!

புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை தவிர மற்ற உள்நாட்டு, வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள்ளே வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதனால், மீண்டும் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக அரசு இன்று(மார்ச், 7) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தமிழகம் வருபவர்கள் இ - பாஸ் விண்ணப்பித்தே வரவேண்டும் . வணிகநோக்கில் மூன்று நாட்களுக்கு குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து பயமில்லாமல் மக்கள் அலட்சியமாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருக்கின்றனர். கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை , தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில், கொரோனா பராமரிப்பு மையங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்திலும் மீண்டும் இ பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவி வருகிறது. இது தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

வினிதா

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

ஞாயிறு 7 மா 2021