மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

கேஸ் விலை உயர்வு: மே.வ முதல்வர் பேரணி!

கேஸ் விலை உயர்வு: மே.வ முதல்வர் பேரணி!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 25 உயர்த்தப்பட்டது. இரண்டாவது முறையாக ரூ.50 உயர்த்தப்பட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.785 ஆக அதிகரிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி 15 வரை மூன்று மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 125 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் போன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக இன்று மதியம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அம்மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரியில் பேரணி நடைபெற்றது. இதில், 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். சிவப்பு நிற கார்டுபோர்டு அட்டையில் செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டரை சுமந்தபடி பெண்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

கொரோனா தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்கள் மீள முடியாமல் இருக்கிற நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இலவசமாக வாங்கப்பட்ட அரிசியை சமைத்து சாப்பிட பல மடங்கு பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் சாதாரண மக்கள் வாங்க முடியாத பொருள்களின் பட்டியலில் சிலிண்டர் இருக்கும்.

மோடி நாட்டை விற்று கொண்டிருக்கிறார். மத்தியில் இருக்கும் அரசானது, நாட்டு மக்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைய தலைமுறைக்கு எதிரானது. இந்த அரசு சீக்கிரம் போக வேண்டும் என்று விரும்புகிறோம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

இதற்கு முன்பும், சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து எலக்ட்ரிக் மோட்டார் வாகனத்தில் பயணித்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதேவேளையில், மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரச்சார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

ஞாயிறு 7 மா 2021