மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

தமிழகத்தின் சமூக நீதி, சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும் : ஜெயரஞ்சன்

தமிழகத்தின் சமூக நீதி, சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும் : ஜெயரஞ்சன்

திருச்சியை அடுத்த சிறுகனூரில் திமுக சார்பில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 7) நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், ‘தமிழகத்தின் சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும்’ என பேசினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “நாம் மிகப் பெரிய அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். எந்த கொள்கைக்காக இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தையும் குழி தோண்டி புதைப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது கைகோர்த்து வருகிறது.

நம் மக்களின் வாழ்க்கையை மீட்கப் போராட வேண்டிய காலம் இது. சமூக நீதி, சுயமரியாதை இரண்டும்தான் நம்மைத் தொடர்ந்து வழி நடத்துகிறது. சமூக நீதி என்றால், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் கிடைக்கக் கூடிய இட ஒதுக்கீடு என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் சமூக நீதி என்பது வளர்ச்சியை எல்லோருக்கும் கொண்டு சேர்த்தல் ஆகும். எல்லோருக்கும், எல்லாவற்றிலும் பங்கு வேண்டும் என்பதற்காகத்தான் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது நம்மை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சேர்த்திருக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு பிகார், எப்படி இருந்ததோ அதுபோன்று தான் நாமும் இருந்தோம். ஆனால் இந்த 30 ஆண்டுக்காலத்தில், நாம் அடைந்துள்ள வளர்ச்சி மாற்றம் என்பதெல்லாம், சமூக நீதி அடிப்படையில் நடந்திருக்கிறது.

இந்த சமூக நீதியை ஒழித்து கட்டுவதை அவர்கள் முதல் பணியாக மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது சுயமரியாதை. பொருளாதார அடிப்படையில் எல்லோருக்கும் வாய்ப்பளிப்பதன் மூலம் யாரும் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சூழ்நிலையை நாம் உருவாக்கியிருக்கிறோம். இதற்கு வித்திட்டது கலைஞர்தான்.

உணவு என்பது எல்லோருக்கும் சுலபமாகக் கிடைக்க வேண்டும் என கலைஞர் யோசித்துச் செயல்படுத்திய திட்டங்கள் உலகளவில் பேசப்படுகிறது. மற்ற மாநிலங்கள் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத் தான் உணவு கொடுப்போம் என மாறி போனபோது. ஆனால் உணவு என்பது கிராமத்தில் இருக்க கூடியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என முன் யோசனையோடு கலைஞர் செயல்படுத்திய திட்டம்தான் பொது விநியோகத் திட்டம்.

1974ல் தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் அந்த முன்னேற்றப் பாதையைக் குழிதோண்டிப் புதைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை தற்போது செய்து கொண்டிருக்கிறார்கள். நமக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பறிக்கும் விதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஜிஎஸ்டியை ஏற்படுத்தியதன் மூலம் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுகின்றனர். தற்போது, மாநில அரசுகளுக்கு வரி விதிக்கும் உரிமை கிடையாது, மத்தியில் என்ன பங்கு வைக்கிறார்களோ, அதை எடுத்துக்கொண்டு வரும் நிலைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட அடிமை சாசனத்தில் தான் அதிமுக கையெழுத்திட்டிருக்கிறது. அதை மத்திய பாஜக அரசு செயல்படுத்துகிறது.

இப்படி மாநிலத்தின் சுயமரியாதையை இழந்து காவடி தூக்கியது மட்டுமே அதிமுகவின் சாதனை. எனவே மாநிலத்தின் சமூக நீதி, சுயமரியாதையை நாம் மீட்டெடுக்க வேண்டும். இருக்கிற திட்டங்களை எல்லாம் நாம் காப்பாற்ற வேண்டும். புதிய திட்டங்களை யோசித்துச் செயல்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. இதற்கு வேக்காடு வைப்பது போல், இருக்கக்கூடிய எந்த கூட்டணியையும் எதிர்க்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

ஞாயிறு 7 மா 2021