மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

சிறுத்தைகளுடன் நேருக்கு நேர்: பாமக புதுத் திட்டம்?

சிறுத்தைகளுடன் நேருக்கு நேர்: பாமக புதுத் திட்டம்?

பொதுத் தேர்தல் என்றாலே வட மாவட்டங்களில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இடையே கூடுதல் டென்ஷன் ஏற்படுவது இயல்பாகிவிட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் இதை மாற்ற நினைக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதற்கொரு திட்டம் வகுத்திருக்கிறார் என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் விசிகவுடன் மோதல் இல்லாமல் தவிர்க்கவேண்டும் என்பதுதான் ராமதாஸின் திட்டம் என்கிறார்கள்.

கடந்த காலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பாமக வேட்பாளரும், விசிக வேட்பாளரும் எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட சந்தர்ப்பங்களில்.... பிரச்சாரத்தின் போதும், வாக்குகள் பதிவாகும் போதும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போதும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டு அது இரு சமூகப் பதற்றமாக மாறியுள்ளது. இதனால் ஒரு தரப்பினர் உடைமைகளையும் உயிர்களையும் இழப்பதும், இன்னொரு தரப்பினர் வழக்கு வம்பு சிறை நீதிமன்றம் என்று அலைவதும் வட தமிழகத்தின் சாபக் கேடானது.

இதுபோன்ற கசப்பான நிகழ்வுகளும் மோதல்களும் நடக்காமல் இருக்க வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் பாமக வேட்பாளர்களை நேருக்கு நேர் நிறுத்தவேண்டாம், அதுபோன்ற தொகுதிகளை அதிமுகவிடமே விட்டுக்கொடுத்துவிடலாம் என பாமக தலைவர் ஜி.கே.மணியிடம் ஆலோசனை செய்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

எப்படியோ தேர்தல் அமைதியாக நடந்தால் பொதுமக்களும் போலீஸும் நிம்மதியாக இருப்பார்கள்.

அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளிலும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

-வணங்காமுடி

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 7 மா 2021