மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

அதிகாரிகளை தடியால் அடியுங்கள்: அமைச்சர்!

அதிகாரிகளை தடியால் அடியுங்கள்: அமைச்சர்!

மக்களின் குறைகளை கேட்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என மத்திய அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலம் பெகுசராயில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியபோது, ”அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளுக்கு செவி சாய்ப்பதில்லை என புகார்கள் வந்துகொண்டே இருக்கிறது. பொதுமக்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். இதுபோன்ற சின்ன விஷயங்களை எல்லாம் என்னிடம் கொண்டு வராதீர்கள். பிடிஓ, எஸ்டிஎம், ஆட்சியர், கிராம பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என அனைவருமே மக்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரிகள் உங்களின் குறைகளை கண்டுகொள்ளவில்லையென்றால், மூங்கில் தடியால் தலையிலே அடியுங்கள். அப்படியும் அவர்கள் சரிபட்டு வரவில்லையென்றால், என்னிடம் வாருங்கள், நான் பார்த்து கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.

மத்திய அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சரின் இம்மாதிரியான பேச்சு சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக் கூடும் என பகுஜன் சமாஜ் கட்சி கண்டனம் தெரிவித்ததோடு, ஏன் இன்னும் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது.

வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 7 மா 2021