மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

குமரி: வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அமித்ஷா

குமரி: வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அமித்ஷா

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ அதே அளவு, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த தேர்தலில் பறிகொடுத்த கன்னியாகுமரி தொகுதியை எப்படியாவது மீண்டும் தன்வசப்படுத்த பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இதையொட்டி, கன்னியாகுமரி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோயில் வந்துள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்திற்கு வந்த அவருக்கு பாஜகவினர் செண்டை மேளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் அமித்ஷா.

தொடர்ந்து, வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் என்ற பெயரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, பாஜக வேட்பாளரான, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அதிமுக பாஜக கூட்டணியைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். பொன் ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி தொகுதி மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, நாகர்கோயில் இந்து கல்லூரி சந்திப்பு முன்பிலிருந்து திறந்த வேனில் ‘ரோட்ஷோ’ பிரச்சாரம் செய்தார்.

அமித்ஷாவுடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி டி ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

பிரச்சாரத்தை தொடர்ந்து வடசேரி உடுப்பி ஹோட்டலில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அமித்ஷாவின் வருகையையொட்டி நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 7 மா 2021