மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின்

திமுக- காங்கிரஸ் ஒப்பந்தம்: தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்டாலின்

திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இன்று (மார்ச் 7) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் , காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு கையெழுத்தானது.

நேற்று இரவு ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையின்படியே இன்று காலை 10 மணிக்கு உடன்பாடு ஏற்பட்டது.

காலை 9.50 மணியளவில் அறிவாலயம் வந்த காங்கிரஸ் கட்சியின் குழுவினரை கனிமொழி எம்பி வரவேற்று அழைத்துச் சென்றார். திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோரும் 25 இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி,

"காங்கிரஸ் கட்சி திமுகவோடு தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சி எழுச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. மதச்சார்பற்ற கூட்டணி என்பது எங்களை நேர்க்கோட்டில் இணைத்திருக்கிறது.

பாரதிய ஜனதா இன்று இந்தியாவுடைய நோயாக இருக்கிறது. கொரோனா வைரசை விட ஆபத்தானதாக பாஜக இருக்கிறது. பல்வேறு கட்சிகளையும், அரசுகளையும் சீர்குலைத்து வருகிறார்கள். காங்கிரஸுக்கு ஆழமான வேர் இருக்கக் கூடிய புதுச்சேரியில் கூட காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் நிலைநாட்டிவிடக் கூடாது, அவர்களுக்கு ஏவல் புரிகிற அதிமுகவுக்கு வாய்ப்பு தந்துவிடக் கூடாது என்று கருதி தமிழக காங்கிரஸ் இதில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது.

ராகுல் காந்தி எங்களிடம், 'இது வெறும் தேர்தல் அல்ல. இரு தத்துவங்களுக்கு இடையிலான தேர்தல். நமது தத்துவம் வெற்றிபெற வேண்டும்' என்று சொன்னார்கள். நாங்கள் மிக மகிழ்ச்சியோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம்.

25 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் கையெழுத்திட்டிருக்கிறோம். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்" என்ற அழகிரியிடம்....

"காங்கிரஸுக்கு படிப்படியாக சீட்டுகள் குறைகிறதே..."என்ற கேள்விக்கு,

"அரசியலில் ஏற்ற இறக்கங்கள் இயல்பு. அதிக இடங்களில் போட்டியிடுவது, குறைந்த இடங்களில் போட்டியிடுவது என்பது அந்தந்த அரசியல் கள நிலவரத்தைப் பொறுத்தது. ராஜ்ய சபா பற்றி கோரிக்கை வைத்திருக்கிறோம். அவர்கள் பரிசீலிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்"என்று கூறினார்.

திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியோடு ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து அவசரமாக திமுக தலைவர் ஸ்டாலின், தனி விமானத்தில் திருச்சி சிறப்புப் பொதுக்கூட்டத்துக்குப் புறப்பட்டார்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

ஞாயிறு 7 மா 2021