மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் சௌமியா அன்புமணி, ஜான் பாண்டியன்?

பாமக வேட்பாளர்கள் பட்டியலில் சௌமியா அன்புமணி, ஜான் பாண்டியன்?

அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, அத்தொகுதிகள் எவை எவை என்பதை அதிமுகவுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், வேட்பாளர்கள் பட்டியலில் பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா பெயரைச் சேர்க்க வேண்டும் என பாமக நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு இரண்டு தனி தொகுதி உட்பட 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

“டாக்டர் ராமதாஸ் தயாரித்துள்ள முதன்மை வேட்பாளர்கள் பட்டியலில் பு.த.அருள்மொழி, தீரன், டாக்டர் செந்தில், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார், இளவழகன், டி.கே.ராஜா, வடிவேல் ராவணன் (தனி) போன்றோர் உறுதியாக இடம்பெறுவார்கள் என தெரிகிறது. மற்றொரு தனி தொகுதியில் ஜான் பாண்டியனைக் கட்சியில் சேர்த்து சீட் கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோல சௌமியா அன்புமணி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் அவர் பெயரையும் வேட்பாளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளும் வன்னியர் சங்கத்தில் உள்ளவர்களும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். , சௌமியாவுக்கும் மனசுக்குள் எம்.எல்.ஏ ஆக வேண்டும் என்ற ஆசையும் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அருள்மொழி, தீரன், ஜி.கே.மணி, வடிவேல் ராவணன், சௌமியா ஐந்து வேட்பாளர்களுக்கும் பாமக தலைமைதான் முழு தேர்தல் செலவையும் செய்தாக வேண்டும் என்பதால் மற்ற 13 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களில் அதிகமாகச் செலவு செய்யக்கூடிய நபர்களை பாமக தலைமை ஆராய்ந்து வருகிறது.

இன்றும் நாளையும் அஷ்டமி, நவமி இருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் தொகுதிகளை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவிக்கும் திட்டம் இருக்கிறது” என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

ஞாயிறு 7 மா 2021