மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

மதிமுக: நான்கில் இருந்து ஆறு ஆனது எப்படி?

மதிமுக:  நான்கில் இருந்து ஆறு ஆனது எப்படி?

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக், மமக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்ட நிலையில் இன்று (மார்ச் 6) மதிமுகவுடனும் பேச்சுவார்த்தை மீண்டும் நடந்து உடன்பாடு ஏற்பட்டது.

முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் மதிமுக 16 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் கொடுத்தது. ஆனால் திமுகவோ நான்கு இடங்கள்தான் என்று சொன்னதும் தகவல் கேட்டு வைகோ அதிர்ந்து போனார்.

மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் தொடர் ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மக்களவைத் தொகுதிகள் அடிப்படையில் ஒரு தொகுதிக்கு மூன்று வீதம் இப்போது சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் போட்டியிட்டது அவர்களுக்கு 3. விடுதலை சிறுத்தைகள் இரு தொகுதிகளில் போட்டியிட்டது, அந்த அடிப்படையில் அவர்களுக்கு 6. இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரு தொகுதிகளில் போட்டியிட்டது, அதனால் அவர்களுக்கும் 6.

அதேபோல மதிமுக ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் கேட்டுப் பெற்றது. அதனால் ஒரு மக்களவைத்தொகுதிக்கு 3 சீட்டுகள், ஒரு ராஜ்யசபாவுக்காக ஒரு சட்டமன்றத் தொகுதி நான்கு சீட்டுகள் மதிமுகவுக்கு ஒதுக்கியது திமுக.

ஆனால் விடுதலைச் சிறுத்தைகளுக்கு 6, நமக்கு நான்கா என்ற குமுறல்கள் தாயகத்தில் வெடித்தன. மீண்டும் பேச்சு நடந்தது. இதில் சிறுத்தைகள் அளவுக்குக்கொடுக்க வேண்டும் அல்லது ஒரு இடம் அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்று வைகோவின் கோரிக்கை திமுகவிடம் முன் வைக்கப்பட்டது. ஆறு தொகுதிகள் தந்தால் அத்தனையிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்று திமுக மீண்டும் நிபந்தனை விதித்தது.

இதுகுறித்து தாயகத்தில் உருக்கமாகப் பேசிய வைகோ, “நாம் ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் நின்றால் கட்சியின் அங்கீகாரம் பாதிக்கப்படும். எனவே மீண்டும் பேசியிருக்கிறேன். ஆனால் ஆறுதான். சின்னம் என்பது இன்று முடிவாகும்” என்று இன்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து இன்று மாலை 6.45 மணிக்கு மதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளோடு வைகோ அறிவாலயம் சென்றடைந்தார். அவரைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினும் அறிவாலயம் வந்தடைந்தார். அங்கே ஒப்பந்தம்கையெழுத்தானது

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 6 மா 2021