மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

இணைய வழியில் பணம்: கண்காணிப்பு தீவிரம்!

இணைய வழியில் பணம்: கண்காணிப்பு தீவிரம்!

ஆன்லைன் பண பரிமாற்ற செயலியான கூகுள் பே, போன் பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோக்கப்படுவதை தடுக்கும் வகையில், பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருப்பதால், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, வாகன சோதனையில் நேற்று வரை பணம், பரிசு பொருட்களாக ரூ.15.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பே, போன் பே மூலமாக பணம் பரிவர்த்தனை நடப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கூகுள் பே, போன் பே மூலம் எந்த கணக்கிலிருந்து பணபரிமாற்றம் நடைபெறுகிறது என்பது குறித்து வங்கிகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பயன்படுத்தாத வங்கி கணக்கில் திடீர் பண பரிவர்த்தனை நடந்தால் தேர்தல் ஆணையத்துக்கு உடனடியாக அந்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என வங்கி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு பார்வையாளர்கள் தமிழகம் வரவுள்ளனர். அதன்படி, செலவின பார்வையாளர்களாக மதுமகாஜன், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரும், பொது பார்வையாளராக அலோக்வர்தன், காவல்துறை சிறப்பு பார்வையாளராக தர்மேந்திரகுமார் ஆகியோர் வருகிற திங்கள் கிழமை தமிழகம் வரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 335-லிருந்து 461-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 5,911 வாக்குச்சாவடிகளும் உள்ளன, இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும். மேலும் சட்டமன்ற தேர்தலுக்காக சென்னையில் மொத்தம் 9,847 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 5 மா 2021