மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 மா 2021

அம்மா சென்டிமென்ட்- சுக்கிர ஓரை: அதிமுகவின் வேட்பாளர் பட்டியல்!

அம்மா சென்டிமென்ட்- சுக்கிர ஓரை:  அதிமுகவின் வேட்பாளர் பட்டியல்!

அதிமுக கூட்டணியில் பாமக தவிர பிற கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாத நிலையில், இன்று மார்ச் 5ஆம் தேதி அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

6 வேட்பாளர்கள் கொண்ட இந்த பட்டியலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் இருந்து போட்டியிடுகிறார்.

அதேபோல அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். மேலும் அமைப்புச் செயலாளரும் அமைச்சருமான டி. ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் இருந்தும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் இருந்தும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்தும், திண்டுக்கல் மாவட்ட இணைச் செயலாளரான தேன்மொழி நிலக்கோட்டை தொகுதியில் இருந்தும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேன்மொழி நிலக்கோட்டையில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர்.

"இன்று (மார்ச் 5) வெள்ளிக் கிழமை மதியம் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை சுக்கிர ஓரை எனப்படும் நல்ல நேரமாகும். மேலும் அம்மாவுக்கு பிடித்த எண் ஆறு. இந்த அடிப்படையில் ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சுக்கிர ஓரையில் வெளியிட்டிருக்கிறோம். ஒரு தேவர், ஒரு கவுண்டர், ஒரு வன்னியர், ஒரு மீனவர், ஒரு நாடார், ஒரு தேவேந்திர குல வேளாளர் என சமுதாய‌ அடிப்படையிலும் இந்த பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார்கள் அதிமுக தலைமைக் கழக வட்டாரத்தில்.

-வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 5 மா 2021