காங்கிரசுக்கு திமுகவின் ஃபைனல் ஆஃபர் இந்த எண் தான்!

politics

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் மிகக் குறைவாக இருப்பதால் அக்கட்சி தனது தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட்ட 41 தொகுதிகளை மீண்டும் கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுகவோ 15 தொகுதிகள் தான் தருவோம் என்று பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. மெல்ல மெல்ல 21 தொகுதிகள் என்ற நிலையில் விடாப்பிடியாக இருந்தது திமுக.

காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு தலைமை தாங்கிய கேரள முதல்வர் உம்மன்சாண்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் இதைத் தெரிவிக்க… “ காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் குறைந்தால் அது தேசிய அளவிலும் பிற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.எனவே 41க்கு குறைய வேண்டாம்”என்று ராகுல்காந்தி தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து 41 தொகுதிகளுக்கு குறையாமல் இருந்தால் வாங்குவது , இல்லை என்றால் கூட்டணியை மறுபரிசீலனை செய்வது என்றும் முடிவில் இருக்கிறது காங்கிரஸ்.

இந்த நிலையில் திமுக தலைமை கழகத்தில் அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் இது குறித்து மூத்த தலைவர்களிடம் இன்று (மார்ச் 4) ஆலோசனை செய்துள்ளார். அதன்படி இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திமுகவில் இருந்து ஒரு முக்கிய தகவல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கும்… ஒரு தொகுதிக்கு மூன்று சட்டமன்ற தொகுதிகள் என்ற அடிப்படையில் 27 தொகுதிகளும் கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடமும் வழங்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லையெனில் நமது வெற்றி வாய்ப்பு என்ன என ஏற்கனவே நேர்காணலில் திமுக தலைவர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில்… இப்போது திமுக தனது இறுதி ஆஃபராக காங்கிரசுக்கு 27+1 என்ற தகவலை அனுப்பி இருக்கிறது.

இதன் அடிப்படையிலேயே காங்கிரஸ் கட்சி முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

**வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *