மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 மா 2021

ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி அவசர ஆலோசனை!

ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி அவசர ஆலோசனை!

சென்னையில் விருப்பமனு தாக்கல் செய்த சூட்டோடு ராஜபாளையம் வந்து கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.

சிவகாசி தொகுதியில் கடந்த இரு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 10 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்தவர் கே.டி ராஜேந்திர பாலாஜி.

இந்த சட்டசபை தேர்தலில் ஏனோ அமைச்சர் ராஜபாளையத்தில் போட்டியிட அதிக ஆர்வம்காட்டி வருகிறார். அமைச்சர்கள் அவரவர் தொகுதியில் போட்டியிட முதல்வர் உத்தரவு போட்ட நிலையிலும் அமைச்சர் கே.டி.ஆர் சிவகாசி விருதுநகர் ராஜபாளையம் என மூன்று தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் ராஜபாளையத்தில் முகாமிட்டுள்ள பாஜக நிர்வாகி நடிகை கௌதமி தொகுதிக்குள் முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தும் தானாக நகருக்குள் கார் டிரைவிங் செய்து தன்னை விளம்பரம் செய்துவரும் நிலையில் ராஜபாளையத்தில் பாஜக கட்சி அலுவலகத்தைத் திறந்து முக்கிய இடங்களில் தாமரை சின்னத்தை வரைந்துவருவது அதிமுகவினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை தெரிந்த அமைச்சர் கே.டி.ஆர் ராஜபாளையம் தனியார் விருந்தினர் மாளிகையில் அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களை ஆறுதல்படுத்தி தான்தான் ராஜபாளையத்தில் போட்டியிடப் போவதாக உறுதிகூறி வியாழக்கிழமை சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றார். முடிவு முதல்வர் கையில் உள்ளது.

- சக்தி பரமசிவன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 4 மா 2021