மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 மா 2021

அமமுகவை சேர்க்க பாஜக அழுத்தமா? ஜெயக்குமார் பதில்!

அமமுகவை சேர்க்க பாஜக அழுத்தமா? ஜெயக்குமார் பதில்!

அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்க்க வேண்டும் என்று பாஜக அழுத்தம் கொடுக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரை சென்னை ஹோட்டலில் சந்தித்து நள்ளிரவு 1 மணி வரை ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கிய அமித் ஷா, “அமமுக தென் மாவட்டத்தில் கணிசமான செல்வாக்கோடு இருக்கிறது. அக்கட்சியை நாம் நம் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு தயக்கமாக இருந்தால் அந்தப் பொறுப்பை எங்களிடம் விடுங்கள். அமமுகவோடு நாங்கள் இடப் பங்கீடு செய்துகொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதுகுறித்து மற்ற ஊடகங்களிலும் தகவல்கள் வெளியான நிலையில் நேற்று முழுதும் அதிமுக மௌனம் காத்த சூழலில், இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக விளக்கியுள்ளார்.

“அதிமுகவை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது. எங்கள் கட்சியின் உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது கிடையாது. .ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு பிஜேபி எங்களுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது போல ஏதோ ஒரு தகவலை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அமித் ஷா அப்படி சொன்னார் என்பதெல்லாம் கட்டுக் கதை.

எனவே முதல்வர் டெல்லியில் எடுத்த முடிவுப்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் சரி, சசிகலாவும் சரி அதிமுகவில் இணைவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை. 100% வாய்ப்பே இல்லை. அந்த நிலைதான் கட்சியின் உறுதியான நிலை.

தினகரன் அவர் தலைமையில்தான் கூட்டணி என்கிறார். இது எள்ளி நகையாடக் கூடிய கூற்றாக இருக்கிறது. அமமுக என்பது குள்ள நரிகளின் கூட்டம்.. அதிமுக என்பது சிங்கங்களின் கூட்டம். எனவே அவரது பேச்சை மக்கள் நகைச்சுவையாக தான் எடுத்துக் கொள்வார்கள்" என்று சொன்ன ஜெயக்குமாரிடம்,

“சசிகலாவின் பலம் என்ன என்பது இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு தெரியும். எனவே அவரைச் சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பது பற்றி அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி சொல்லி இருக்கிறாரே?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.

“எங்களுடைய கூட்டணியில் பாஜக ஒரு அங்கம். எங்களது தலைமையில் அவர்கள் இருக்கிறார்கள். அதேநேரம் எங்கள் கட்சியின் உள் விவகாரங்களில் ஏற்கனவே அவர்கள் தலையிடாத நிலையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள். அவர் சொன்னது அவரது யோசனையாக இருக்கலாம். அந்த யோசனையைதான் நாங்கள் நிராகரித்து விட்டோமே. எனவே அது குறித்து பேசுவதற்கு வாய்ப்பு இல்லை நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை”என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 3 மா 2021