மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

எடப்பாடி மீது ராகுல் கடும் தாக்கு!

எடப்பாடி மீது ராகுல் கடும் தாக்கு!

சட்டமன்ற தேர்தலோடு, கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 6இல் நடைபெற உள்ள நிலையில் இன்று நடந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் புதுமையான தேர்தல் பிரச்சாரம் காங்கிரஸ்காரர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை செய்ய திங்கட்கிழமை காலை வந்த

ராகுல் காந்தி கன்னியாகுமரி சர்ச்ரோடு பகுதியில் பிரசாரம் செய்தார். அவர் வருகைக்காக சாலையில் வியர்வை சிந்த மக்கள் காத்திருந்தனர்.

அங்கு அவர் பேசியபோது, " மத்திய அரசு தமிழ் கலாசாரத்தை மதிக்கவில்லை. மத்திய அரசு சொல்வதை எல்லாம் செய்யும் ஒரு முதல்வராக தமிழக முதல்வர் பழனிசாமி இருக்கிறார்.மாநிலத்தை முன்னிலைப்படுத்தாமல், மோடி என்ன செய்ய விரும்புகிறார் என்பதையே பழனிசாமி மக்களிடம் முன்னிலைப்படுத்துகிறார். மோடிக்கு முன் தலைகுனிந்த ஒருவர் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம், ஒரே வரலாறு என மோடி பேசுகிறார். அப்படியெனில் தமிழ் மொழி, இந்திய மொழி இல்லையா? தமிழ் கலாசாரம், இந்திய கலாசாரங்களில் ஒன்று இல்லையா? இது இந்த தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன். நமது நாட்டின் அனைத்து கலாசாரத்தையும் காப்பாற்றுவேன்" என்றார்.

நாகர்கோயிலில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, தமிழக மக்களின் பிரதிநிதியாக இருப்பவரே தமிழக முதல்வராக வேண்டும் என்பதை இந்த தேர்தல் மூலம் மக்கள் நிரூபிக்க வேண்டும். ஆனால் மோடிக்கு அடிபணிந்து இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஒருபோதும் இதனைச் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்றால் அவர் மக்களுக்காகவே இருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் மோடியின் பிரதிநிதியாக இருக்கிறார். ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி, தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் அவமதித்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து தக்கலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் பேசியதாவது" காமராஜர் முதல்வராக இருந்தபோது, அவர் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்தார். உதாரணமாக, அவர் செயல்படுத்திய மதிய உணவு திட்டத்தை, தற்போது இந்தியாவின் அனைத்து மாநில பள்ளிகளிலும் தொடர்ந்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கேற்றார்போல செயல்படும் முதல்வர் இருந்தால் மட்டுமே முன்மாதிரியாக இருக்க முடியும். மோடியின் பேச்சுகளை கேட்டு செயல்பட்டால் அவ்வாறு இருக்க முடியாது "என்றார்.

தமிழர்களின் மொழி, கலாசாரம், பண்பாட்டை காப்பாற்ற நான் இருக்கிறேன் என பேசியதும் காமராஜர் பற்றி பேசியதும் பிரசாரத்திற்கு இடையே மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் உற்சாகத்தில் மாணவ, மாணவிகளுடன் நடனமாடியதும் ஒரு புதுமையான தேர்தல் பிரச்சாரமாகவே இருந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதியும் காங் திமுக கூட்டணியே வென்றது. குமரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் வென்றது. தற்போது இரண்டிற்கும் மீண்டும் ஒரு தேர்தல். அதே கூட்டணிதான்.ஆனால் வேட்பாளர்கள் யார்?தொகுதி எந்த கட்சிக்கு என தெரியாத நிலையில் ராகுல்காந்தி யின் வருகை காங்கிரஸ் திமுகவினர் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்தி பரமசிவன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 1 மா 2021