மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

தேர்தல்: பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல்!

தேர்தல்: பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல்!

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், ரூ.50,000 வரை எந்தவித ஆவணமின்றி பணத்தை எடுத்து செல்லலாம். அதற்குமேல் கொண்டு செல்லும் பணத்திற்கு கண்டிப்பாக ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, பறக்கும் படையினர் நடத்திய தீவிர சோதனையில் பல இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி

தர்மபுரியில், 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனங்களை தொப்பூர் சுங்கச்சாவடி அருகே தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சக்திவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த கார் ஒன்றில் எந்தவொரு ஆவணமுமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,95,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தத் தொகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரதாபிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளர் சிவன், இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என சார் ஆட்சியர் பிரதாப் கூறினார்.

நீலகிரி

கூடலூரை அடுத்துள்ள தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்புப் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கேரளாவிலிருந்து வந்த 5 காய்கறி லாரிகளில் கணக்கில் வராத 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்திற்கான முறையான ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டால், பணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம்

பாபநாசம் அருகே பல்லவராயன்பேட்டையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

திங்கள் 1 மா 2021