மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 மா 2021

196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி!

196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி!

சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள 196 இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி பிரகாஷ் கூறுகையில், அரசு இடங்களில் தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி இல்லை. தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்று வைத்து கொள்ளலாம். சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொதுக் கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்.

பேனர்கள், பிரசுரங்கள் அடிக்கும்போது கண்டிப்பாக அச்சகத்தின் பெயர், விவரம் இடம்பெற்றிருக்க வேண்டும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க மார்ச் 16ஆம் தேதிக்குள் படிவம் 12D பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றும் பணி தேர்தல் அதிகாரி உத்தரவின்பேரில் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுமார் 700 இடங்களிலும், பெரம்பூர் தொகுதியில் 228 இடங்களிலும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 90 இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகர் முழுவதும் 335 இடங்களில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வினிதா

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி! ...

9 நிமிட வாசிப்பு

கைதான உதவியாளர் மணி: டென்ஷனில் எடப்பாடி- பத்து வருடப் பின்னணி!

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, ...

7 நிமிட வாசிப்பு

தர்மபுரி: எம்.ஆர்.கே-வின் புது வியூகம்: உற்றுநோக்கும் அதிமுக, பாமக!

ஜோதிமணி போராட்டம்: தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த ...

10 நிமிட வாசிப்பு

ஜோதிமணி போராட்டம்:  தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி - முடித்து வைத்த டி.ஆர்.பாலு

திங்கள் 1 மா 2021