மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

பலன் தருமா கேரள யாத்திரைகள், இடதுகளுக்கு கிட்டுமா 77 வரலாறு?

பலன் தருமா கேரள யாத்திரைகள், இடதுகளுக்கு கிட்டுமா 77 வரலாறு?

நாட்டின் வடகிழக்கு முனையான மேற்கு வங்கம், தென்மேற்குக் கோடியான கேரளம் இரண்டுக்கும் இடையே பல ஒருமித்த அம்சங்களைப் போலவே மாறுபட்ட அம்சங்களும் உண்டுதானே?

வங்கத்தில் மம்தாவின் திரிணமூல், இடதுசாரிகள் + காங்கிரஸ், பாஜக என்றால், கேரளத்திலோ இடது முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக.

வங்கத்தில் கால் நூற்றாண்டுக் கால இடதுசாரி முன்னணியின் வலு குறைந்து, வாழ்நாள் எதிரியாக இருந்துவந்த காங்கிரஸுடன் கைகோர்த்து ஒரே அணியாகக் களம்காண்கிறது; கேரளத்திலோ மாறிமாறி ஆட்சி எனும் மலையாள மக்களின் தீர்ப்பைப் பெற்று எதிரெதிராகக் களத்தில் நின்றுவருகின்றன, காங்கிரஸ் அணியும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அணியும்!

மூன்றாவது அணியாக நிற்கும் பாஜகவோ, கேரள சட்டப்பேரவையில் வலுவான ஒரு சக்தியாகிவிடும் முயற்சியிலும் மேற்கு வங்கத்தில் மம்தாவை வீட்டுக்கு அனுப்பி மாநிலத்தின் ஆளும் கட்சியாகிவிட வேண்டும் என்றும் கவனமாக காய்நகர்த்தி வருகிறது.

மூன்று தரப்புமே வேண்டுதலைப் போல இந்த முறை பேரணிப் பயணத்தைக் கையில் எடுத்திருக்கின்றன. ஆளும் இடதுசாரி கூட்டணியின் சார்பில் 'விகாசன முன்னேற்ற ஜாதா’ என்கிற பெயரில் இரண்டு பயணங்களை நடத்தியிருக்கிறார்கள். சிபிஐ-எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் விஜயராகவன் தலைமையிலும் சிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான பினோய் விஸ்வம் தலைமையிலுமாக இந்தப் பயணங்கள் நடத்தப்பட்டன. தற்செயலாக தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட கடந்த வெள்ளியன்று இந்தப் பயணம் நிறைவடைந்துவிட்டது.

அதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி மாநில அளவிலான பேரணிப் பயணத்தை நடத்தி முடித்துவிட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ரமேஷ் சென்னிதாலா தலைமையில் காங்கிரஸ் நடத்திய ‘ஐஸ்வர்ய கேரள யாத்திரை’க்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாஜகவின் சார்பிலும் அதன் மாநிலத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் விஜயா யாத்திரை தொடங்கப்பட்டது. அது பாதிவழியில் இருக்கையில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்திருப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக பேரணியை முடித்துவிடும் திட்டம் அவர்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

ஆளும் கூட்டணியைப் பொறுத்தவரை முதலமைச்சர் பினராயி விஜயன்தான், மீண்டும் வேட்பாளர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தத் தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றால், 1977ஆம் ஆண்டு வரலாற்றை மீண்டும் படைக்க முடியும் எனும் ஆவலிலும் உற்சாகக் கனவிலுமாக இருக்கிறது, இடது கூட்டணி.

கேரளம் என்றாலே எந்தக் கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியாது என்பது தொடர்ச்சியான யதார்த்தம்தான். ஆனால் 77ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அப்போதைய காங்கிரஸ் + இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி தன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதும் அங்கு நடந்திருக்கிறது.

அந்த வரலாறு திரும்புமா, பார்ப்போம்!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 28 பிப் 2021