மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

‘ஆஃப் ஆன மைக்’: நாடாளுமன்ற நிகழ்வுடன் ஒப்பிட்ட ராகுல்

‘ஆஃப் ஆன மைக்’: நாடாளுமன்ற நிகழ்வுடன் ஒப்பிட்ட ராகுல்

நாடாளுமன்றத்தில் நான் எப்போது பேசத் தொடங்கினாலும் என் மைக் ஆஃப் ஆகிவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தென் மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காகக் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தமிழகத்துக்கு நேற்று வருகை தந்தார்.

இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 28) திருநெல்வேலி தென்காசி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடினார்.

அப்போது நாட்டிலுள்ள கல்வியாளர்கள் ஆசிரியர்கள் கருத்துக்களைக் கேட்காமலேயே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டு விட்டதாகக் குற்றம்சாட்டினார்.

இதனிடையே பேராசிரியர்கள் உடன் கலந்துரையாடிய போது, அவர்களது கேள்விக்குப் பதிலளித்தார் ராகுல் காந்தி. அப்போது பேராசிரியர் ஒருவர் கேள்வி எழுப்ப முயலும்போது அவரது மைக் ஆஃப் ஆகிறது.

இதையடுத்து மைக் ஆன் ஆனதும் பேச தொடங்குகிறார். அப்போது குறுக்கிட்ட ராகுல், 'ஒன் செகண்ட். இப்பொழுது உங்கள் மைக்கிற்கு என்ன ஆனதோ, இதேதான் நாடாளுமன்றத்தில் தினசரி எனது மைக்கிற்கு ஏற்படும். நான் வாயைத் திறந்தாலே என் மைக் ஆப் ஆகிவிடும். எனவே நீங்கள் இப்போது எப்படி உணர்ந்தீர்கள் என்று எனக்கு புரிகிறது ' என்று கூற, கூட்ட அரங்கில் சிரிப்பலை உண்டானது.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 28 பிப் 2021