மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு: ரத்து செய்ய மறுப்பு!

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு: ரத்து செய்ய மறுப்பு!

திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

‘கலைஞர் வாசகர் வட்டம்’ என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில் கடந்த ஆண்டு பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி நீதிபதிகள் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 27) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் நடவடிக்கையால்தான் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி ஏற்றதாக ஆர். எஸ்.பாரதி கூறியுள்ளார். அதுவும் மத்தியப்பிரதேசத்தில் எஸ்சி பிரிவைச் சேர்ந்த ஒரு நீதிபதி கூட கிடையாது என்றும் பேசியுள்ளார். இவரது பேச்சு ஆதாரமற்றது.

நாட்டிலேயே திராவிட இயக்கத்தினால்தான் எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் நீதிபதியாக பதவி ஏற்றது போல இவர் பேசியுள்ளார். இவரது பேச்சு உயர் பதவியை வகித்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியை அவமதிக்கும் விதமாக உள்ளது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை ரத்து செய்ய முடியாது” என்று கூறியவர்,

மேலும், “இவர் மீதான வழக்கை ‘சிறப்பு நீதிமன்றம் தினந்தோறும்’ என்ற அடிப்படையில் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அறிவு சார்ந்த விவாதங்கள் விமர்சனங்கள் வரவேற்கத்தக்கது. ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தலைவர்கள் விருப்பம்போல் பேசுகின்றனர். ஒருவர் மீது ஒருவர் வி‌ஷத்தைக் கக்குகின்றனர். இது வருங்கால சந்ததியினருக்கு உகந்ததல்ல. ஆர்.எஸ்.பாரதியின் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டுள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 28 பிப் 2021