மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்?

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்கு அடுத்த நாளான நேற்று பிப்ரவரி 27ஆம் தேதி மளமளவென மூன்று முக்கிய கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துள்ளனர் அதிமுக நிர்வாகிகள்.

பிப்ரவரி 27ஆம் தேதி காலை பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி, பொதுச்செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸையும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் தனித்தனியே சந்தித்துப் பேசியுள்ளனர்.

முதலில் பாஜகவுக்கான தொகுதிப் பங்கீட்டைத்தான் அறிவிக்க திட்டமிட்டனர். ஆனால், தொகுதிகள் எண்ணிக்கை விஷயத்தில் பாஜவுக்கும் அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு தொடர்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே ஐந்து தொகுதிகளுக்குள் பாஜகவை சுருக்கியது அதிமுக. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலம், சென்னை மண்டலம் ஆகியவற்றில் கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 15 முதல் 18 இடங்கள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் பாஜகவிலோ 25க்குச் சற்றும் குறைவதில்லை என்றும், ஒருவேளை குறைந்தாலும் 20 என்ற நம்பருக்கு கீழே போகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

பாமகவுக்கு 23 போக மீதி 211 இடங்கள் இருக்கின்றன. இதில் தேமுதிக, பாஜக, தமாகா ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கும் மேலும் இரட்டை இலையில் நிற்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்க வேண்டிய சூழலில் இருக்கிறது அதிமுக.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (பிப்ரவரி 27) இரவு சென்னையை வந்தடைந்தார். இன்று அவர் புதுச்சேரி, விழுப்புரம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அவர் தமிழகத்தில் இருக்கும்போதே பாஜகவுக்கு எத்தனை தொகுதிகளை என்பதை முடிவு செய்துவிட வேண்டுமென்பதில் அக்கட்சியின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷண் ரெட்டியும், சி.டி.ரவியும் தெளிவாக இருக்கிறார்கள்.

எனவே இன்றே பாஜகவுக்கான இடங்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படக் கூடும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

ஞாயிறு 28 பிப் 2021