மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

அதிமுகவுடன் பாமக, பாஜக பேச்சு: லீலா பேலஸ் ஓட்டலில் 4 மணிக்கு சந்திப்பு!

அதிமுகவுடன் பாமக, பாஜக பேச்சு: லீலா பேலஸ் ஓட்டலில் 4 மணிக்கு சந்திப்பு!

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழகத்தின் முக்கிய கூட்டணிக் கட்சிகளின் தலைமைகள் தொகுதிப் பங்கீட்டுக்கான வேலைகளை முடுக்கிவிட்டுள்ளன.

முதல் கட்டமாக, தி.மு.க. அணியில் காங்கிரஸ் கட்சியுடன் இரண்டு நாள்களுக்கு முன்னர், முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வெளிப்படையாக எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. அடுத்தும் பேச்சுவார்த்தை தொடரும் என்பதுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி முடித்துக்கொண்டார்.

ஆளும் கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், பேச்சுவார்த்தையைத் தொடங்க தாமதமாவதாகக் கூட்டுக் கட்சியான தேமுதிக வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகிறது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா பல இடங்களில் இதைக் கூறியும் அதிமுக தரப்பில் திட்டவட்டமான பதில் கூறாமல், மையமாகவே இருந்து வருகின்றனர்.

இதற்கிடையே, பாமக குழுவினருடன் அமைச்சர்களும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி உள்பட்ட அக்கட்சியின் நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இடையில் தனி இட ஒதுக்கீடு விவகாரத்தால் தொங்கல் ஏற்பட்டது.

நேற்று வன்னியர் சமூகத்துக்கான தனி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாமக தரப்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில், அதிமுக தரப்பினருடன் முறைப்படி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்குச் சென்னை, பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்தத் தொகுதிகள் என்பன குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படாது என்றே இரு தரப்பிலும் கூறுகின்றனர். கூட்டணி உறுதி என உறுதிப்படுத்தும் விதமாகவும் பூர்வாங்கப் பேச்சுவார்த்தையாகவுமே இருக்கும் என்கிறார்கள்.

பாமக குழுவினர் அதிமுக குழுவினரைச் சந்தித்து பேசும் போது, பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையிலான குழுவினரும் அங்கிருப்பார்கள் என்றும் கூட்டணி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டு தரப்பிலும் அடுத்த கட்ட வேலையில் ஜோராக இறங்கிவிட்டார்கள். முக்கியமில்லாத கூட்டுக் கட்சிகளை இரு தரப்புமே பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

யார் முக்கியம் யார் முக்கியமில்லை என்பதும் சில நாள்களில் தெரிந்துவிடும்; இரண்டு கூட்டணிகளின் உருவம் ஓரளவுக்குத் தோன்றிவிடும் என்றும் சொல்கிறார்கள்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 27 பிப் 2021