மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 பிப் 2021

பிரதமர் ஆலோசனைப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?

பிரதமர் ஆலோசனைப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதா?

5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாக நடைபெறுகிறது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதே சமயத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்க பாஜக காய் நகர்த்தி வருகிறது. பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட மூத்த தலைவர்களும் அமைச்சர்களும் மேற்கு வங்க மாநிலத்திற்குத் தொடர்ச்சியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, “அசாமில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடத்தவும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தவும் முடியும் என்றால் மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் 8 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் ஆலோசனைப்படிதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதா? தேர்தல் ஆணையமே மக்களுக்கு நீதி வழங்காவிட்டால் அவர்கள் எங்கே செல்வார்கள்? எந்த தந்திரங்களைப் பயன்படுத்தினாலும் திரிணமுல் காங்கிரஸ் நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறும்.

பாஜக விரும்பும் தேதியில் வாக்குப்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று எனக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் தங்கள் அதிகாரத்தை தேர்தலில் தவறாக பயன்படுத்த முடியாது. நாங்கள் சாதாரண மக்கள் எனினும் தொடர்ச்சியாகப் போராடுவோம். தேர்தலில் பணத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 27 பிப் 2021