மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

காங்கிரஸுக்கு எத்தனை சீட்? கச்சேரி ஆரம்பம்!

காங்கிரஸுக்கு எத்தனை சீட்? கச்சேரி ஆரம்பம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 க்கான திமுக கூட்டணியின் முதல் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தை இன்று (பிப்ரவரி 25) காலை 11 மணியளவில் அறிவாலயத்தில் தொடங்கியிருக்கிறது.

காங்கிரஸ் சார்பில் இந்த பேச்சுவார்த்தைக் குழுவுக்கு முன்னாள் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. அவர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் அறிவாலயத்துக்கு வந்தனர். திமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று அறிவாலயத்துக்கு வரும் முன்னர் நேற்று மாலையே உம்மன் சாண்டி சத்தியமூர்த்தி பவனில் தமிழகத்தில் காங்கிரஸுக்கான இடங்கள் எத்தனை கேட்க வேண்டும் என்பது பற்றி, தீவிரமாக விவாதித்தார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்தார்.

அப்போது கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பல இடங்களில் காங்கிரஸ் தோற்பதற்கு திமுகவின் பகிரங்க ஒத்துழைப்பு இன்மையே காரணம் என்றும், இது தொடர்பாக அப்போதைய திமுக தலைவர் கலைஞரிடம் காங்கிரஸ் சார்பில் புகார்கள் எழுத்துபூர்வமாகவே அளிக்கப்பட்டன. ஆனால் சில மாதங்களில் கலைஞர் உடல் நலம் குன்றியதால் அந்தப் பிரச்சினை அப்படியே விடப்பட்டது. அந்த புகார்களை நாம் மீண்டும் திமுக தலைமையிடம் சொல்லி, காங்கிரஸுக்கு உரிய இடங்களை பெற்றே தீருவது என்று ஆலோசித்துள்ளனர்.

அதன்படியே இன்று காலை பேச்சுவார்த்தையில் இந்த விவரங்கள் திமுகவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரங்களில். பேச்சுவார்த்தைக்குப் பின் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு அதன் பின் அடுத்த கட்ட முடிவெடுக்கப்படும் என்கிறார்கள் அறிவாலயத்தில்.

-வேந்தன்

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

வியாழன் 25 பிப் 2021