மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

செய்திக்கு செல்வப் பெருந்தகை மறுப்பு!

செய்திக்கு செல்வப் பெருந்தகை மறுப்பு!

தமிழ்நாடு காங்கிரசின் எஸ்.சி.எஸ்.டி. பிரிவுத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான செல்வப் பெருந்தகை தன்னைப் பற்றி மின்னம்பலத்தில் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி கமலுடன் கை கோர்க்கும் காங்கிரஸ் புள்ளி? என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “தமிழக காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவராக இருக்கும் செல்வப் பெருந்தகை விரைவில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் சேர இருப்பதாக தகவல்கள் வருகின்றன”எனக் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் பிப்ரவரி 24 ஆம் தேதி செல்வப் பெருந்தகையின் வழக்கறிஞர் என்.எப்.கணேஷ் மின்னம்பலத்துக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார்.

அதில், “எனது கட்சிக்காரர் செல்வப் பெருந்தகையின் ஒப்புதலோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவருமான செல்வப்பெருந்தகையின் அரசியல் தரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் மாற்றுக் கட்சிக்கு செல்லப் போவதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள் முற்றிலும் தவறானவை. செல்வப் பெருந்தகை அதுபோன்ற எந்த செயல்களிலும் ஈடுபடவில்லை. செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியில் தொடர மாட்டார் என்ற கற்பனையோடு இந்த செய்தி எழுதப்பட்டிருக்கிறது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் செல்வப் பெருந்தகை அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறும்வாய்ப்புகள் அதிகம் இருக்கும் நிலையில் அவருக்கு எதிரான ஒரு சதியாகவும், அவரது அரசியல் இமேஜை குலைக்கும் வகையிலும் இந்த செய்தி அமைந்திருக்கிறது. மேலும் செல்வப் பெருந்தகை சார்ந்த கட்சிக்குள்ளும் அவரைப் பற்றிய குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த செய்தி அமைந்திருக்கிறது.

மேலும் செல்வப்பெருந்தகை எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர். தமிழக காங்கிரஸின் எஸ்.சி.எஸ்.டி பிரிவின் தலைவராகவும் இருக்கிறவர். எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 இன்படி, எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மீதான வெறுப்புணர்ச்சியைப் பரப்பும் விதமாகவும் இந்த செய்தி அமைந்துள்ளது.

எனவே இந்த செய்திக்கு நேரடியாக மறுப்பு வெளியிட வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. செல்வப்பெருந்தகை பற்றிய அந்த செய்தியில் நமக்கு எவ்வித அரசியல், சாதிய உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தச் செய்தியால் செல்வப் பெருந்தகையின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 25 பிப் 2021