மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

புதுச்சேரியில் மோடி: பர்மிட் சலுகை, பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரியில் மோடி:  பர்மிட் சலுகை, பள்ளிகளுக்கு விடுமுறை!

காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்ட மூன்று தினங்களில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிப்ரவரி 25ஆம் தேதி கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகிறார்.

ஆட்சி ஊசலாட்டத்திலிருந்தபோது கடைசி தருணத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரி வந்தார். ஆட்சி கவிழப் போவதை உறுதி செய்துகொண்டு கோபமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ராகுல் மேடையேறிய ஏ எஃப் டி மைதானத்தில்தான் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப்போகும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்துவந்தார்கள். ஆனால், சில தினங்களுக்கு முன்பு எதிர்பாராத கனமழையால் மைதானம் சேறும் சகதியுமாக இருப்பதால், ஏர்போர்ட் அருகில் ஹெலிபேடு மைதானத்தைத் தேர்வுசெய்து ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள்.

பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சொரானா, தேர்தல் பொறுப்பாளரும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான அர்ஜுன் ராம் மெக்வால் ஆகிய இருவரும் மக்கள் கூட்டத்தை அலைகடலெனத் திரட்ட பலவிதமான திட்டங்களைப் போட்டுவருகிறார்கள் . இதற்காக அண்மையில் பாஜகவில் சேர்ந்த நமசிவாயத்துடன் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருக்கும் 30 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தாகவேண்டும் என்று சொல்லி, அதற்கான வாகன வசதிகளையும் ஏற்பாடுகள் செய்துகொடுத்துள்ளார்கள்.

தமிழகத்திலிருந்து கடலூர், விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து வாடகை வேன், கார், மற்றும் பேருந்துகளை புக்கிங்செய்துள்ளனர். அதில் வரும் பல வாகனங்களுக்குப் புதுச்சேரிக்குள் வருவதற்கு பர்மிட் இல்லை என்றபோதும்... “பயப்படாமல் வாருங்கள் வாகனத்தை யாரும் நிறுத்தமாட்டார்கள்” என்று ஊக்கம் கொடுத்ததால் பர்மிட் இல்லாத வாகனங்களும் உள்ளே வரவிருக்கிறது என்கிறார்கள் புதுச்சேரி ஆர்டிஓகள்.

புதுச்சேரி நகரம் முழுவதும் பாஜக கொடிகள் மற்றும் தோரணத்தால் அலங்கரித்துள்ளனர். நமச்சிவாயம் இரவும் பகலும் கண் இமைக்காமல் ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளர்களையும் தொடர்புகொண்டு எத்தனை வாகனங்கள், எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று கூட்டத்தை உறுதிசெய்துவருகிறார்.

மோடி வருகையை ஒட்டி புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது அம்மாநில அரசு.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 25 பிப் 2021