மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

ஒரு பக்கம் வழக்குகள் வாபஸ்... இன்னொரு பக்கம் கைதா?

ஒரு பக்கம் வழக்குகள் வாபஸ்...  இன்னொரு பக்கம் கைதா?

சத்துணவு ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அனைவரையும் முழு நேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று (பிப்ரவரி 23) தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். நாகர்கோவிலில் 250க்கும் மேற்பட்டவர்கள், தூத்துக்குடியில் 500க்கும் மேற்பட்டவர்கள், கடலூரில் 40க்கும் மேற்பட்டவர்கள், காஞ்சிபுரத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் என கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் போராடிய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளைத் திரும்பப்பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறமென்றால், உரிமைக்காகப் போராடுவோரை கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது.

உரிமைப் போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமடுக்காத அதிமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்தி வையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் திமுகழக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 24 பிப் 2021