மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

ஜெ.பிறந்தநாள்: முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் விருப்ப மனு!

ஜெ.பிறந்தநாள்:  முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் விருப்ப மனு!

மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும்,தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்தநாள் அதிமுகவினரால் இன்று (பிப்ரவரி 24) கொண்டாடப்பட்டு வருகிறது.

காலையில் அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கூடினார்கள்.

அலுவலக வளாகத்தில் இருக்கும் ஜெயலலிதா சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஜெ,வின் 73 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 73 கிலோ எடைகொண்ட கேக்கை வெட்டினார்கள்.

பின்னர் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவினர் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறுவதற்கான நிகழ்வை துவக்கி வைத்தனர். முதல் மனுவாக தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விருப்ப மனுவை கொடுத்தார். அதையடுத்து சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட தன் விருப்ப மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்தார். இதேபோல திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கோபி தொகுதியில் போட்டியிட அமைச்சர் செங்கோட்டையன், தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையம் தொகுதியில் போட்டியிட அமைச்சர் தங்கமணி ஆகியோர் விருப்ப மனு கொடுத்தனர்.

தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் போட்டிபோட்டுக்கொண்டு விருப்பமனுவை அளித்தனர். இதன் மூலம் தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் மீண்டும் அதிமுக தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதாக தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தது. அதற்கான அரசு விழா வெலிங்டன் கல்லூரியில் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து ஜெ.நினைவிட வளாகத்தில் அறிவுசார் பூங்கா, டிஜிட்டல் அருங்காட்சியகம் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

.இன்று மாலை 6 மணிக்கு ஜெ. பிறந்தநாளை ஒட்டி அவரவர் இல்லத்தில் தீபம் ஏற்றி ஜெயலலிதாவை வணங்குமாறு அதிமுக சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதன்படி முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 24 பிப் 2021