மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: விஜயகாந்த் வலியுறுத்தல்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: விஜயகாந்த் வலியுறுத்தல்!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்க்கொல்லி நோயான கொரோனா கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவத் தொடங்கி உயிரிழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.49 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,472 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அரசியல் கட்சிகள் பல்வேறு அறிவிப்புகளையும், அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளையும் விடுத்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, பின் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஒருபுறம் பொதுமக்களிடம் இயல்புநிலை திரும்பினாலும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் நலன் கருதி அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். மேலும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் தமிழக அரசு வேலை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி தேமுதிக கொடி நாளை முன்னிட்டு விஜயகாந்த் திறந்த வேனில் கட்சி அலுவலகத்துக்கு வந்து கொடியேற்றினார். அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர் என் தொண்டர்களையும் என் மக்களையும் சந்திக்க விரைவில் வரப்போகிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 24 பிப் 2021