மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

பிரதோஷம் -அறிவாலயத்தில் வழியும் கூட்டம்!

பிரதோஷம் -அறிவாலயத்தில் வழியும் கூட்டம்!

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக இன்று (பிப்ரவரி 24) முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவித்துள்ளது. அதேநேரம் திமுகவில் கடந்த 17ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரலாறு காணாத அளவில் தொடர்ந்து நிர்வாகிகள் விருப்ப மனுக்களை 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டி சாதாரணமாகப் பெற்றுச் செல்வதால், விருப்ப மனுக்கள் வாங்கும் தேதி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக இன்று (பிப்ரவரி 24) காலை முதலே திமுக அலுவலகம், விருப்ப மனு பெறத் தொடங்கும் அதிமுக அலுவலகம், தி.நகரில் உள்ள பாமக அலுவலகம் என்று சென்னையில் எங்கு பார்த்தாலும் கூட்டமாக உள்ளது.

திமுகவின் முதன்மைக் கழக செயலாளர் நேரு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தலைவர்களுக்கும் இன்றுதான் விருப்ப மனு பெறப்படுகிறது. அறிவாலயத்துக்கு வருவதற்காக அண்ணா சாலை முழுதும் இன்று காலையில் இருந்தே டிராபிக் ஜாமாகிவிட்டது.

ஏற்கனவே அறிவித்தபடி இன்று கடைசி நாள். ஆனால் அதைத்தான் 28 ஆம் தேதி வரை நீட்டித்துவிட்டார்களே...அப்புறம் ஏன் இன்று கூட்டம் அலைமோதுகிறது என்று அறிவாலயத்தில் திமுக நிர்வாகி ஒருவரை கேட்டோம்.

“இது தெரியாதா சார். இன்னிக்கு பிரதோஷம், அதோட புதன் கிழமை வேற. இதை விட நல்ல நாள் இருக்க முடியாது. அதனாலதான் இன்னிக்கு விருப்ப மனு கொடுத்தா அது வேட்பு மனுவாக மாறும்குற நம்பிக்கையோட பல பேரு விருப்ப மனு வாங்குறாங்க. திமுக ஆபீஸ்ல மட்டுமில்ல மத்த கட்சி அலுவலகங்கள்ளயும் இதுதான் நிலைமை” என்கிறார்.

பிரதோஷத்துக்கு ஆலயங்களில் கூட்டம் நிரம்பி வழிவதைப் பார்த்திருக்கிறோம். அறிவாலயத்திலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 24 பிப் 2021