மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

புதுச்சேரியில் பாஜக ஆட்சி: ஆளுநரிடம் மத்திய அமைச்சர் கேட்ட பட்டியல்!

புதுச்சேரியில் பாஜக ஆட்சி: ஆளுநரிடம் மத்திய அமைச்சர் கேட்ட பட்டியல்!

புதுச்சேரியில் பாஜக ஆட்சியை அமைக்கத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் ஒருவரை நியமனம் செய்துள்ளது அக்கட்சியின் தலைமை!

அடுத்தடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் பெரும்பான்மை இழந்த முதல்வர் நாராயணசாமி பிப்ரவரி 22 ஆம் தேதி பதவி விலகினார்.

இதன் பின்னணியில் பாஜக தலைமை மாஸ்டர் பிளான் போட்டுத் தொலைத் தூரத் திட்டத்தோடு செயல்பட்டுவந்தது, காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியும் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக தலைமையாலான புதிய ஆட்சியை அமைக்கத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிக்கானர் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி. யாக வெற்றிபெற்றவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.

தேர்தல் வேலைகள் அத்தனையும் நன்கு அறிந்தவர், மக்களோடு எளிமையாக பழகக்கூடியவர் என்கிறார்கள் பாஜகவினர். தேர்தல் அறிவிப்புக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தின் முக்கிய தேவைகள் என்ன, மக்கள் கோரிக்கைகள் என்னவென்று தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் மெக்வால்.

புதுச்சேரியில் ஹோட்டல் அக்கார்டில் தங்கியிருக்கும் அமைச்சர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாற்று கட்சியினரையும் சந்தித்து அவர்களுக்குத் தேவையானதைச் செய்துகொடுத்து நம்பிக்கையை உருவாக்கி வருகிறார்.

பிப்ரவரி 16ஆம் தேதி புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தமிழிசை சௌந்தராஜனிடம் அலைபேசியில் பேசிய மெக்வால், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பதிலுக்கு ஆளுநரும் நன்றி சொல்லியுள்ளார்.

“ புதுச்சேரி மக்களின் குறைகளை தீர்க்க ஸ்பெஷல் ஃபண்ட் ஏற்பாடு செய்யலாம். அதற்காக நீங்கள் உடனே ஒரு திட்டப்பட்டியல் போட்டு அனுப்புங்கள்”என்றும் ஆளுநர் தமிழிசையிடம் கூறியுள்ளார் மெக்வால்.

புதுச்சேரி மாநிலத்தில் சுதேசி மில், பாரதி மில், ஏ.எஃப்.டி மில் மூன்றும் சிறப்பாகச் செயல்பட்டுவந்தபோது பல்லாயிரம் தொழிலாளிகள் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் இப்போது அந்த மில்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. பிரெஞ்சு ராணுவத்துக்கும், பிறகு இந்திய ராணுவத்துக்கு உடைகள் தைக்கப்பட்ட ஏ.ஏஃப்.டி.மில் இன்று மூடிக்கிடக்கிறது.

மேலும், 750 ஏக்கரில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் அமைக்கக் காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் போட்டவர்கள் அத்தோடு அதை விட்டுவிட்டார்கள். இப்படி புதுச்சேரியில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை முதன்மையாகக் கொண்டு தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார் மெக்வால்.

இதுவரை எந்தெந்த திட்டங்களுக்கு மத்திய அரசு குறுக்கே நின்றதோ, இனிமேல் அந்தத் திட்டங்களுக்கெல்லாம் உடனடி அனுமதி கிடைக்கும் என்கிறார்கள் புதுச்சேரி அரசு வட்டாரங்களில்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 24 பிப் 2021