மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

ஒன்றிணைந்து ஆட்சி அமைப்போம்: சசிகலா பகிரங்க அழைப்பு!

ஒன்றிணைந்து  ஆட்சி அமைப்போம்: சசிகலா பகிரங்க அழைப்பு!

பிப்ரவரி 8 ஆம் தேதியன்று பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பிப்ரவரி 9 ஆம் தேதியன்று சென்னை வந்த சசிகலா, இன்று (பிப்ரவரி 24) ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி முதன் முதலாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று காலை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. அவருடன் டிடிவி தினகரன், அமமுக தலைமை நிர்வாகிகள், விவேக் ஜெயராமன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கிய சசிகலா, அங்கேயே தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

“என்னுடைய அக்கா புரட்சித் தலைவியின் 73 ஆவது பிறந்தநாளில் உங்களுக்கெல்லாம் வணக்கம். நான் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தபோது தமிழக மக்கள், தொண்டர்களின் வாழ்த்துகளால் நலம் பெற்று வந்திருக்கிறேன். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவியின் உண்மையான உடன்பிறப்புகள் ஒன்று சேர்ந்து,சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு, புரட்சித் தலைவி நமக்கு சொல்லிவிட்டுச் சென்ற.... நூறு ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய ஆட்சி நீடிக்க வேண்டும் என்று அவர் சொல்லியுள்ளதை மனதில் நிறுத்தி நாம் அனைவரும் இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இதுவே என் எண்ணமாகும். நீங்கள் இதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.ஏனென்றால் நீங்கள் புரட்சித் தலைவியின் உண்மைத் தொண்டர்கள். நானும் உங்களுக்கு துணை நிற்பேன். நன்றி”என்று பேசினார்.

உடனே, “அடுத்த கட்ட திட்டம் என்ன...தொண்டர்களை சந்திக்க வருவீர்களா?” என்று கேள்விகள் கேட்கப்பட்டபோது,

“விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க வருவேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார் சசிகலா.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 24 பிப் 2021