மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

விவசாய கடன் தள்ளுபடி: பாதி நிதி கூட பட்ஜெட்டில் இல்லையே...

விவசாய கடன் தள்ளுபடி: பாதி நிதி கூட பட்ஜெட்டில் இல்லையே...

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்த கடன் தொகையின் மதிப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய். இந்நிலையில் இன்று (பிப்ரவரி 23) தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டே இந்த அரசின் கடைசி பட்ஜெட் ஆக இருக்கும் நிலையில் இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தமிழக விவசாயிகளின் பயிர்க் கடன் ரூபாய் 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இடைக்கால பட்ஜெட்டில் ரூபாய் 5 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதி ரூபாய் 7,110 கோடியை அடுத்து தமிழகத்தில் அமையப் போகிற ஆட்சியின் மீது சுமத்துவதற்கு அ.தி.மு.க. அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ? விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாகக் கூறிய அ.தி.மு.க. அரசு, அதற்குரிய நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாமல் வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திருக்கிறது”என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இதுகுறித்து, “ விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன் ரூ. 12,110.74 கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ. 5,000 கோடி மட்டுமே கூட்டுறவு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7110 கோடி தொகை கிடைக்கவில்லையெனில் கூட்டுறவு அமைப்புகள் தாங்க முடியாத நிதி நெருக்கடிக்கு உள்ளாகி செயல்பட முடியாத நிலை ஏற்படுவதுடன், எதிர்காலத்தில் விவசாய கடன் பெறும் வாய்ப்பு பறிபோகும் ஆபத்து உருவாகும்”என்று எச்சரித்துள்ளார்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 23 பிப் 2021