மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

'கை தட்டுங்க அண்ணே' : பட்ஜெட்டுக்கு இடையே சுவாரஸ்யம்!

'கை தட்டுங்க அண்ணே' :  பட்ஜெட்டுக்கு இடையே சுவாரஸ்யம்!

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் உரையின் போது துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், 'கை தட்டுங்க அண்ணே' என்று கேட்டது கலகலப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டப்பேரவையில் 2021 -22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், மாநில நிதி அமைச்சருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணியளவில் சட்டப்பேரவை கூடியபோது, வேளாண்மை, சுகாதாரம், உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அறிக்கையை தாக்கல் செய்தார் துணை முதல்வர்.

வனத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட ஓபிஎஸ், சுற்றுச்சூழல் மாசை குறைக்க மரம் நடும் திட்டத்தை 2011- 2012ஆம் ஆண்டிலிருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு நடப்பட்ட 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இவ்வாறு வனத்துறை குறித்த அறிவிப்புக்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் சட்டப்பேரவையில் கை தட்டியிருக்கிறார்.

உரையின் நடுவிலும், மற்றவர்கள் அமைதியாக இருந்ததை கவனித்துக் கொண்டிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ், பட்ஜெட் வாசிப்பை நிறுத்திவிட்டு, அங்கிருந்தவர்களை பார்த்து 'கைதட்டுங்கண்ணே.. கைதட்டுங்கண்ணே' என்றார். ‘பாவம் அண்ணன் மட்டும் கைய தட்டிக்கிட்டு இருக்காரு’ என்று கூறி சிரிக்க, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி கரவொலி எழுப்பினர்.

பட்ஜெட் உரையின் போது, நடைபெற்ற இந்த சுவாரஸ்ய சம்பவம் சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்று ஓபிஎஸின் உரை இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 23 பிப் 2021