மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

கடைசி சட்டமன்றம்: எடப்பாடி- ஸ்டாலின் வியூகம் என்ன?

கடைசி சட்டமன்றம்:  எடப்பாடி- ஸ்டாலின் வியூகம் என்ன?

தமிழக சட்டசபை கூட்டம் இன்று பிப்ரவரி 23ஆம் தேதி கூடுகிறது. அதிமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியின் கடைசிக் கூட்டத் தொடராக இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

கூட்டத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம்.

கடந்த சில நாட்களாகவே தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு அறிவிப்புகளை செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும், தனது பிரச்சாரத்துக்கு மக்கள் ரியாக்‌ஷன் என்ன... இந்த ஆட்சியிடம் மக்கள் இன்னும் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையெல்லாம் பல்வேறு தரப்புகளிடம் இருந்தும், உளவுத்துறையிடம் இருந்தும் கேட்டுப் பெற்றிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

“ வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் அளவுக்கு... மக்கள் மறக்க முடியாத அளவிற்கு, நல்ல திட்டங்களை அறிவிக்கவேண்டும். குறிப்பாக பெண்களுக்கு பயன் தரும் வகையில் அரசு ஊழியர்களுக்கு பயன் தரும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென திட்டமிட்டிருக்கிறார் முதல்வர். இது அனேகமாக இந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிப்பாக வெளிவரலாம்” என்கிறார்கள் ஆளுங்கட்சிப் புள்ளிகள்.

எதிர்க்கட்சிகள் என்ன வியூகம் வைத்திருக்கின்றன?

பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையைக் கண்டித்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய அதிமுக ஆட்சியைக் கண்டித்தும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள் எதிர்க்கட்சிப் பிரமுகர்கள்.

இந்த இரு வியூகங்களுக்கு இடையே வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு முதல்வரிடம் இருந்து வருமா என்று சட்டப் பேரவைத் தொடரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது பாமக.

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

செவ்வாய் 23 பிப் 2021