மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 பிப் 2021

மீண்டும் மீட்டிங் ஹால்: ரஜினியின் அடுத்த அறிவிப்பு?

மீண்டும் மீட்டிங் ஹால்: ரஜினியின் அடுத்த அறிவிப்பு?

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த 20 ஆம் தேதி சந்தித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டில் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது. ஏற்கனவே ரஜினி தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்ட நிலையில், எல்லா நண்பர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்பது போல ரஜினியின் ஆதரவையும் கேட்பேன் என்று கூறியிருந்தார் கமல்ஹாசன்.

இந்த நிலையில்தான், பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு பிப்ரவரி 20 ஆம் தேதி ரஜினிகாந்த் இல்லத்துக்குச் சென்று நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து 21 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கமல், “நானும் ஆபரேஷன் செய்துகொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் உடல் நலம் விசாரித்தார். நான் அவரிடம் உடல் நலம் விசாரித்தேன். நண்பர்கள் சந்திக்கும்போது என்ன பேசுவார்களோ, அதைத்தான் பேசினோம். நாங்கள் அரசியல் பேசவில்லை”என்றார்.

“உங்களுடன் பணியாற்ற ரஜினிகாந்தை அழைப்பீர்களா?” என்ற கேள்விக்கு, “அவர்தான் உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் எப்படி கூப்பிட முடியும். அது ஒரு நல்ல நண்பனுக்கு அழகாக இருக்காது” என்று தெரிவித்தார் கமல்.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. இதற்காக ஏற்கனவே அவர் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் மீட்டிங் ஹால் புக் செய்திருக்கிறார் என்று ரஜினி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.

ரஜினி இப்போதைக்கு அரசியலுக்கு வரவில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார் என்று அண்மையில் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்திருந்தார். அப்படியென்றால் ரஜினி மீண்டும் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வியை தமிழருவியின் கருத்து எழுப்பியது.

இந்த நிலையில் 26ஆம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் தேர்தலில் யாருக்கேனும் வாய்ஸ் கொடுக்கப் போகிறாரா அல்லது வேறு பிரச்சினைகள் பற்றி தன் கருத்தை சொல்லப் போகிறாரா என்று ரஜினிக்குதான் தெரியும்.

-வணங்காமுடி

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 22 பிப் 2021