மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

ராமதாஸின் வன்னியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை என்னாச்சு?

ராமதாஸின் வன்னியர் உள் ஒதுக்கீடு கோரிக்கை என்னாச்சு?

சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் உள் ஒதுக்கீடு அளித்தால்தான் கூட்டணி பற்றி பேச முடியும் என்று அதிமுகவுக்கு நேரடியாகவே எச்சரிக்கைகள் கொடுத்து வந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கடந்த இரு வாரங்களாகவே இதுகுறித்து எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் அமைதிகாத்து வருகிறார்.

இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், எஸ்.பி. வேலுமணி. தங்கமணி ஆகியோர் தைலாபுரம் தோட்டத்துக்கே சென்று ராமதாஸிடம் பேசினார்கள். அதன் பின் சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் பிப்ரவரி 4 ஆம் தேதி பாமக, அதிமுக என இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் இன்ன முடிவு எடுக்கப்பட்டதாக இரு தரப்பிலும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

மாறாக பிப்ரவரி 5 ஆம் தேதி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விதியே விதியே என் செய நினைத்தாய் வன்னிய சாதியை...எனக்குரையாயோ?’என்று பதிவு செய்திருந்தார். இதன் பிறகு அவர் இந்த விவகாரம் குறித்து கருத்துகள் எதையும் வெளிப்படுத்தவில்லை.

பிப்ரவரி 28 ஆம் தேதி அதிமுக கூட்டணி மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கும் நிலையில் அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய அவசரத்தில் இருக்கிறது அதிமுக.

இந்நிலையில் உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸின் அமைதிக்குக் காரணம் என்னவென விசாரித்தோம்.

“தங்கமணி வீட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டுக்கு சென்று சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை.

அந்தப் பேச்சுவார்த்தையில் எம்பிசி உள் ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதாக அரசு தரப்பில் உறுதி தரப்பட்டது. அதற்கு மேல் பாமக தரப்பில் கேட்டும் அதிமுக ஏற்றுக் கொள்ளவில்லை. வரும் 23 ஆம் தேதி தொடங்கும் இடைக்கால பட்ஜெட்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அதனால்தான் அந்த விவகாரத்தில் ராமதாஸ் அமைதி காத்து வருகிறார். சட்டமன்ற அறிவிப்பைப் பொறுத்து இந்த விவகாரத்தின் அடுத்த கட்டம் இருக்கும்” என்கிறார்கள் பாமக, அதிமுக வட்டாரங்களில்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 20 பிப் 2021