மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 பிப் 2021

திமுக கூட்டணிக்குள் மநகூ ஸ்டைல்!

திமுக கூட்டணிக்குள் மநகூ ஸ்டைல்!

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கொடுக்கப்பட இருக்கின்றன என்ற கேள்வி இன்னமும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்கப்படும் முன்னரே திமுக தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதியாக ஒருவர் ஒவ்வொருக் கூட்டணி கட்சி தலைவரையும் தனித்தனியாக சந்தித்து உங்கள் கட்சிக்கு இத்தனை சீட்டு தான் என்று ஸ்டாலினின் குரலை ஒலிக்கச் செய்திருக்கிறார்.

இதுபற்றி மின்னம்பலத்தில் ஏற்கனவே செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம். குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்று இடங்கள் தான் ஒதுக்கப்படும் என்று எ.வ.வேலு மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல திருமாவளவனை சந்தித்த ஸ்டாலினின் பிரதிநிதி இரண்டு சீட்டுகள் தான் என்று தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இதேபோல மூன்று சீட்டுகள் என்ற தகவல் சொல்லி அனுப்பப்பட்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் மூன்று சீட்டுகள்தான் என்று சொல்லி அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி மதுரையில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் ஸ்டாலின் வேறு நிகழ்ச்சி இருந்ததால் முன்பே உரையாற்றிச் சென்றுவிட்டார். இம்மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் என பல கூட்டணிக் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டுக்குப் பின் இந்த நான்கு கட்சித் தலைமைகளுக்கும் இடையே ஒரு புதிய ஒருங்கிணைவு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில். இந்த நான்கு கட்சிகளுமே ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியாக தேர்தலை சந்தித்தன.

“ நாம் 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி என அமைத்து தனித்துப் போட்டியிட்டதுதான் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்துவிட்டது என்ற வருத்தம் ஸ்டாலினிடம் இன்னும் இருக்கிறது. அதை அவரது பிரதிநிதிகளே நம்மிடம் கூறியிருக்கிறார்கள்.

அது அன்றைய அரசியல் சூழல். இதற்கு பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் நாம் அனைவரும் திமுக அணியில் தான் போட்டியிட்டோம். அப்போது நாம் ஒற்றுமையோடு இருந்து திமுகவிடம் பேசியதால் அனைவருக்கும் சமமான இடங்கள் கிடைத்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 , விடுதலை சிறுத்தைகளுக்கு 2, மதிமுகவுக்கு ஒரு மக்களவை ஒரு மாநிலங்களவை என திமுக கூட்டணியில் இடம் கொடுக்கப்பட்டது.

தற்போதைய சட்டமன்ற தேர்தலில் நாம் திமுகவிடம் தனித்தனியாக பேசுவதைவிட மக்களவைத் தேர்தலில் எப்படி அனைவருக்கும் சரிசமமாக இடங்கள் வழங்கப்பட்டதோ அதேபோல இப்பொழுதும் வழங்க வேண்டும் என்று கூறுவோம். நம் ஒவ்வொரு கட்சிக்கும் குறைந்தபட்சம் 10 தொகுதிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக வைப்போம். அப்போதுதான் குறைந்தபட்சம் எட்டு இடங்களிலாவது நாம் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்’ என்று இக்கட்சிகளின் தலைவர்கள் பேசியிருக்கிறார்கள். திமுக கூட்டணிக்கு உள்ளேயே ஒரு மக்கள் நல கூட்டணி ஸ்டைலை பின்பற்ற இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தனித்தனியாக போனால்தானே இரண்டு, மூன்று என்கிறார்கள். நாம் எல்லாம் சேர்ந்து கேட்டால் என்ன?’ என்பதுதான் மதுரையில் மையம் கொண்டிருக்கும் இவர்களின் புதிய தீர்மானம்”என்கிறார்கள்.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

சனி 20 பிப் 2021