மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

ராகுல் சென்றதும் ராஜினாமா செய்யுங்கள்: முதல்வர் உருக்கம்!

ராகுல் சென்றதும் ராஜினாமா  செய்யுங்கள்: முதல்வர் உருக்கம்!

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கச் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவருகின்றனர்.

மூத்த அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ தீபாஞ்சான் இருவரும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்கள், அதன் பிறகு மல்லாடி கிருஷ்ணா ராவ் நேற்று முன்தினம் தனது ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் சிவகொழுந்துக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பிவைத்தார். நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி, ஜான்குமார் எம்.எல்.ஏ ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ.தனவேல் ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டார் ஆக ஐந்து எம்.எல்.ஏ க்கள் பலம் குறைந்துவிட்டது காங்கிரஸ் ஆட்சிக்கு.

அவர்களை தொடர்ந்து விஜயவேணி உட்பட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் கொடுக்க முயற்சித்த தகவல்கள் முதல்வர் நாராயணசாமிக்குத் தெரிந்து, சபாநாயகர் சிவகொழுந்தைத் தொடர்புகொண்டு, “ ராஜினாமா கடிதம் கொடுப்பவர்களை நாளை ஒரு நாள் பொறுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். ராகுல் வந்துட்டு போனதும் அவர்கள் விருப்பப்படி கொடுக்கும் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில்.... இன்று பிப்ரவரி 17ஆம் தேதி, மூன்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வந்திருக்கிறார். ஹோட்டல் அக்கார்டில் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், ராகுல் காந்தி, முதல்வர் நாராயணசாமி மூவரும் ஆட்சி கவிழப்போவதைப் பற்றி ஆலோசனைகள் செய்துள்ளார்கள். அதில் மெஜாரிட்டி நிரூபித்த பிறகு முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாமா, அல்லது முன்கூட்டியே ராஜினாமா செய்யலாமா என்றும் ஆலோசனை செய்துள்ளார்கள்.

இதற்கிடையில்... இன்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், அதிமுக எம்.எல்.ஏ,கள், பாஜக நியமன எம்.எல்.ஏ,கள் உட்பட 14 எம்.எல்.ஏ. க்கள் ஒன்று சேர்ந்துபோய் துணை ஆளுநரிடம், முதல்வர் நாராயணசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும் என மனுகொடுக்க சென்றார்கள். துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்காத நிலையில் அவரது சிறப்புச் செயலாளர் தேவநீதி தாசிடம் மனுகொடுத்துள்ளார்கள். மனுவைப் பெற்றுக்கொண்ட சிறப்புச் செயலாளர் புதிய ஆளுநர் நாளை வருகிறார் அவரது பார்வைக்கு வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராகத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஓரிரு நாட்களில் வருகைத்தர இருக்கிறார். அவர் வந்ததும் முதல்வர் நாராயணசாமியிடம் மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்வார். அதற்கு முன்பே முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் நாராயணசாமி என்கிறார்கள் புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர்கள்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 17 பிப் 2021