மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

தாமரையை மலரவைக்க வரும் தமிழிசை

தாமரையை மலரவைக்க வரும் தமிழிசை

முதல்வர் நாராயணசாமியின் நீண்டநாள் போராட்டங்களுக்குப் பிறகு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்றம் செய்து புதுச்சேரி மாநிலத்துக்குத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனைப் பொறுப்பு ஆளுநராக நியமித்துள்ளது மத்திய அரசு.

2016இல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்கள் வந்ததும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை நியமித்தது மத்திய அரசு. கிரண்பேடி பொறுப்பேற்ற ஒன்பதாவது நாள் ஜூன் 6ஆம் தேதி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார் நாராயணசாமி. இருவரும் பொறுப்பேற்று ஐந்து வருடங்கள் முடிய மூன்றரை மாதங்கள் உள்ள நிலையில் துணைநிலை ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கிரண்பேடியும், நாராயணசாமியும் பொறுப்பேற்றதிலிருந்து இருவரும் அதிகார மோதலால் முட்டி மோதிக்கொண்டு வந்தார்கள். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மாற்ற வலியுறுத்தி பலவிதமான போராட்டங்களை நடத்தி வந்தனர் நாராயணசாமியும் காங்கிரஸ் கட்சியினரும்.

நாராயணசாமி கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கிரண்பேடியை மாற்றிவிட்டு தமிழிசையைப் பொறுப்பு ஆளுநராக நியமித்துள்ளது மத்திய அரசு.

புதுச்சேரியில் தாமரை மலர பாடுபட்டவர் தமிழிசைதான், தமிழக பாஜக தலைவராக இருந்தபோது போடப்பட்ட விதையை அறுவடை செய்யத்தான் புதுச்சேரி மாநிலத்துக்குத் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழிசை.

மேலும் மொழி பிரச்சினையால் ரகசியங்கள் பேச முடியவில்லை. குறைகள், குற்றங்கள் சொல்ல முடியவில்லை, சரியான திட்டங்களை வகுக்க முடியவில்லை என்பதும் கிரண்பேடியை மாற்றிவிட்டு தமிழிசையை நியமிக்க முக்கிய காரணம் என்கிறார்கள் புதுச்சேரி பாஜகவினர்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா: ஐடி விங் மாற்றப் பின்னணி!

10 நிமிட வாசிப்பு

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: வார்டு வரையறை, இட ஒதுக்கீடு: நேரு சொன்னது ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல்  திண்ணை:   வார்டு வரையறை, இட ஒதுக்கீடு:  நேரு சொன்னது நடந்ததா?

புதன் 17 பிப் 2021