மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

வேட்பாளர் தேர்வில் என் பங்கு: ஓபிஎஸ் ஓப்பன் பேச்சு!

வேட்பாளர் தேர்வில் என் பங்கு: ஓபிஎஸ் ஓப்பன் பேச்சு!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிமுக தலைமை நேற்று (பிப்ரவரி 15) அறிவித்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளர் தேர்வில் தனது பங்கு குறித்தும், பிரச்சாரம் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 15) மாலை தேனியில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக தலைமைக் கழக பேச்சாளர் குமரி பிரபாகரன் பேசும்போது, “அண்ணன் ஒருங்கிணைப்பாளர் அவர்களே... உங்கள் தொண்டனாகக் கேட்கிறேன். நீங்கள் எப்போது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கப் போகிறீர்கள்? விரைவில் நீங்கள் பிரச்சாரம் தொடங்க வேண்டும்” என்று வெளிப்படையாகக் கேட்டார்.

இதற்கு தனது உரையில் பதிலளித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

”இன்றைக்கு இந்த இயக்கத்துக்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் நமக்கு மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும். ஏனென்று சொன்னால், இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கின்றன. அதற்குத் தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆரும், அம்மாவும் இந்த இயக்கத்தை தியாக உணர்வுகொண்ட, தொண்டர்கள் இயக்கமாக வளர்த்தார்கள்.

எம்.ஜி.ஆரை முதல்வராக உருவாக்கிய மாவட்டம் என்ற பெருமை நமது தேனிமாவட்டத்துக்கு உண்டு. அந்த பெரும்பாக்கியம் நமக்கு கிடைத்தது. அதிமுகதான் 30 ஆண்டுகள் ஆளும் உரிமையை பெற்ற ஒரே இயக்கம். இங்கே ஒரு தொண்டன், தலைமைக் கழகத்தின் பேச்சாளர் ஒருங்கிணைப்பாளரைப் பார்த்து ஒரு உத்தரவை இட்டிருக்கிறார் என்னும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த ஜனநாயக மரபு அதிமுகவிடம்தான் இருக்கிறது. ‘அண்ணன்...நீங்கள் பிரச்சாரத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என அறிவிக்க வேண்டும்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். இதுதான் அதிமுக.” என்று குமரி பிரபாகரன் பேச்சைக் குறிப்பிட்ட ஓ.பன்னீர் தொடர்ந்தார்.

“நம்முடைய தேர்தல் காலப் பணிகளை முறைப்படியாக செய்து வருகிறீர்கள். அடிப்படைப் பணியான வாக்குச் சாவடிக் குழுக்களை அமைத்திருக்கிறீர்கள். ஒவ்வொரு வாக்குச் சாவடிக் குழுக்களும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளில் இருக்கும் வாக்காளர்கள் அந்தந்த வாக்குச் சாவடிக்கு சம்பந்தப்பட்டவர்கள்தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் காலப் பணிகளை நாம் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும்.

உங்கள் எல்லாருக்கும் தெரியும். அம்மா அவர்கள் என்னை வைத்துக்கொண்டுதான் எல்லா வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்வார் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். வருகிற 2021 சட்டமன்றத் தேர்தலில் களம் காணும் நமது வேட்பாளர்களையும் வெற்றிபெற வைக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் இருக்கும் நான்கு தொகுதிகள் மட்டுமல்ல...234 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது என்பதை நான் நன்றாக உணர்வேன். விரைவில் பிரச்சாரத்தை மேற்கொள்வேன்” என்று கூறினார்.

அதிமுகவின் அனைத்து தொகுதிகளின் வேட்பாளர் தேர்வும் தனது கண்காணிப்பில், தனது மேற்பார்வையில்தான் நடக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகவே இந்தக் கூட்டத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 16 பிப் 2021