மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

திருச்சி திமுக மாநாடு எப்போது? குழப்பத்தில் தொண்டர்கள்!

திருச்சி திமுக மாநாடு எப்போது? குழப்பத்தில் தொண்டர்கள்!

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திருச்சியில் திமுக திட்டமிட்ட பிரம்மாண்ட மாநாடு எப்போது என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பு நிறுவனமான ஐபேக் -க்குக்கும் திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் நேருவுக்கும் மாநாட்டை வடிவமைப்பதில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் பரவின. அதனால்தான் மாநாடு திட்டமிட்ட தேதியில் இருந்து தள்ளிப் போகிறது என்றும் திமுக வட்டாரத்தில் செய்திகள் பரவின.

ஆனால் அடிக்கடி மாநாட்டு ஏற்பாடுகளை பார்த்துப் பார்த்து பட்டை தீட்டிவரும் கே.என். நேரு, “ஐபேக் நிறுவனத்துக்கும் தனக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் மாநாட்டுப் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்,

முதலில் பிப்ரவரி 21 ஆம் தேதி என்று திட்டமிடப்பட்ட இந்த மாநாடு பிறகு பிப்ரவரி 28 ஆம் தேதி என திட்டமிடப்பட்டது. மாநாடு முடிந்த பிறகு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் திருச்சியில் இருந்து மறுநாள் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை செல்வது என்றும் முடிவாகியிருந்தது. ஆனால் இப்போது மார்ச் முதல் வாரத்துக்கு கூட தள்ளிப் போகலாம் என்கிறார்கள் திருச்சி திமுக பிரமுகர்கள்.

இதுகுறித்து திருச்சி திமுக பிரமுகர்களிடம் பேசும்போது, “நடக்க இருக்கிற மாநாட்டை திருப்பு முனை மாநாடாக நடத்த கே.என். நேரு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார். மாநாட்டுப் பணிகளில் மிகத் தீவிரமாக இருக்கிறார்.

மேடை எப்படி இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஐபேக் மேற்பார்வை. மற்ற எலலாம் நேரு கட்டுப்பாடுதான். மேடையைக் கூட ஐபேக் ஆலோசனையின்படி நேருதான் அமைக்கிறார். சுமார் ஐநூறு ஏக்கர் நிலம் சிறுகனூரில் நிரவி சமன்படுத்தப்பட்டுள்ளது. திறந்தவெளி மேடை பந்தல் இல்லாத மாநாடு என்றாலும் மற்ற அடிப்படைத் தேவைகளுக்கான பணிகள் அதிகம்.

நிர்வாகிகள் மட்டும் சுமார் நான்கரை லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொண்டர்கள், அபிமானிகள், பொதுமக்கள் எல்லாம் சேர்த்தால் பத்து முதல் 12 லட்சம் வரை திரள வாய்ப்பிருக்கிறது.

300 முதல் 500 மொபைல் டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 15 லட்சம் பேருக்குத் தேவையான குடிநீர் கணக்கிடப்பட்டு ஆங்காங்கே போர் போட்டாகிவிட்டது. மாநாட்டுத் திடலுக்குள் நியாய விலை உணவகங்கள் 500 திறப்பதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட பிரம்மாண்ட மாநாட்டுக்காக நேருவுக்கு கிடைத்திருக்கும் கால அவகாசம் குறைவுதான். என்றாலும் தேதி எப்போது என்பதில் தொண்டர்களும் நிர்வாகிகளும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் விருப்ப மனு வாங்கும் படலம் தொடங்கிவிட்டது. அடுத்து எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிக்கை வந்துவிடும். எனவே மாநாட்டை விரைந்து நடத்த வேண்டியது அவசியமாகிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

செவ்வாய் 16 பிப் 2021